சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் காரை முன்பதிவு செய்ய கட்டணமாக ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இந்த மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மேலும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய காரை முன்பதிவு செய்வோரில் 500 பேருக்கு சிறப்பு சலுகைகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நிசான் நிறுவனம் தேர்வு செய்யும் 500 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வு முறை மற்றும் இதர விதிமுறைகள் நிசான் இந்திய நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனுடன் நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் சிறப்பாகவே வழங்கப்பட்டுள்ளது.இதில் ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360 டிகிரி கோண கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்காக காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வசதி நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கார் கிடைக்கிறது.
மேலும் இது 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் இதில் வழங்கப்படுகிறது.மேலும் இதில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு இந்த ரக கார் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கார் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
DINASUVADU.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…