அட்டகாசமான ஸ்டீயரிங் அம்சங்களுடன் TATA எலெக்ட்ரிக்கல் கார்.. விரைவில் களமிறங்கும் Punch EV.!

Punch EV

டாடா பஞ்ச் இவியில் (Tata Punch EV) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது.

வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் டாடா பஞ்ச் எஸ்யூவியின் இவி காரை (Tata Punch EV) அறிமுகப்படுத்தவுள்ளது. தற்பொழுது, இந்த டாடா பஞ்ச் இவி சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பஞ்ச் இவியில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வெளியாகியுள்ளது.

Punch EV
Punch EV [Image source : Twitter/@evstan07]

பஞ்ச் இவி வெளிப்புறம்:

இந்த பஞ்ச் இவியில் புதிய அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் LED DRLகள், சிக்னேச்சர் ஹியூனிட்டி லைன், ஸ்குவாரிஷ் வீல் ஆர்ச்கள், தடிமனான பாடி கிளாடிங், 90 டிகிரி வரை திறக்கும் கதவுகள் மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவை அடங்கும். மேலும், பஞ்ச் இவியில் உள்ள நான்கு சக்கரங்களும் டிஸ்க் பிரேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Punch EV
Punch EV [Image source : Twitter/@evstan07]

பஞ்ச் இவி உட்புறம்:

பஞ்ச் இவியின் உட்புறம் டாடா மோட்டார்ஸின் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த ஸ்டீயரிங் மையத்தில் ஒளிரும் லோகோ மற்றும் ஹாப்டிக் டச் கன்ட்ரோல்கள் இருக்கும். மேலும், இவியில் பொருத்தப்பட்டுள்ள 360 டிகிரி கேமரா அனைத்து பகுதிகளில் உள்ள காட்சிகளை திரையில் காட்டும்.

Punch EV
Punch EV [Image source : Twitter/@MotorOctane]

பஞ்ச் இவி பேட்டரி:

பஞ்ச் இவி ஆனது திரவ-குளிரூட்டப்பட்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியின் திறன் வெளியிடப்படவில்லை. பஞ்ச் இவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 300 கிமீ தூரம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Punch EV
Punch EV [Image source : Twitter/@MotorOctane]

எப்போது அறிமுகம்.?

டாடா பஞ்ச் இவி வரும் 2024ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிமுகமாகும் பட்சத்தில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை இருக்கலாம். மேலும், பஞ்ச் இவி இந்த சிட்ரோயன் eC3 மற்றும் எம்ஜி காமெட் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்