ஸ்மார்ட்வாட்ச் கண்ட்ரோலுடன் களமிறங்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500..!!

Default Image

 

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவி புதியவடிவில்  விற்பனைக்குவந்துள்ளது. ரூ.12.32 லட்சம் என்ற சவாலான விலையில் இந்த புதிய மாடலை பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 தற்போது புதுப்பொலிவுடன் மூன்றாவது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை சந்தித்துள்ளது.

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லை்ட, பம்பர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக வேறுபடுத்துகிறது. க்ரில் அமைப்புக்கு கீழேகா துணை க்ரில் அமைப்பு பிரதான க்ரில் அமைைப்புடன் இணைக்கப்பட்டது போல மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரோம் வில்லைகள் பதிக்கப்பட்ட புதிய க்ரில் அமைப்பு, பழைய மாடலில் இருந்த S- வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் இப்போது புதிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுக்கு மேலாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இப்போது க்ரில் அமைப்புக்கு கீழே இணைந்ததாக ஏர்டேம் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பரிலும் லேசான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. பக்கவாட்டில் முக்கிய மாற்றமாக புதிய அலாய் வீல்கள் இடம்பிடித்துள்ளன. விலை உயர்ந்த வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் வீல்களும், விலை குறைவான வேரியண்ட்டுகளில் 17 அங்குல அலாய் வீல்களும் கொடுக்கப்படுகின்றன. கதவுகளுக்கு கீழ்பகுதியில் புதிய க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு வசீகரம் கூட்டப்பட்டு இருக்கிறது.

பின்புறத்தில் புதிய எல்இடி விளக்குகள் கொண்ட ஹவுசிங் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே இருந்த செங்குத்தான க்ளஸ்ட்டர் எடுக்கப்பட்டு இப்போது முக்கோண வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட்டுக்கு மேலாக சற்று பெரிய க்ரோம் சட்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய ரூஃப் ஸ்பாய்லரும் குறிப்பிடத்தக்க மாற்றமாக கூறலாம்.

உட்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் மென்மையான உணர்வை தரும் லெதர் கவர் செய்யப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோல் அமைப்பிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது.

முதல்முறையாக ஸ்மார்ட்வாட்ச் என்ற கைக்கடிகாரம் போன்ற சாதனம் இந்த காருடன் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, காரின் எரிபொருள் அளவு, டயர்களில் காற்றழுத்தம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதிகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலமாக பெற முடியும்.

விபத்து ஏற்பட்டால், தானியங்கி முறையில் அவரச உதவி மையத்திற்கு தகவல் அனுப்பும் வசதியும் உண்டு.  புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் முக்கிய மாற்றமாக அதிக சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி க்ரிம்ஸன் ரெட், மிஸ்டிக் காப்பர் என்ற இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது. இதுதவிர, ஒபுலென்ட் பர்ப்புள், வல்கானோ பிளாக், லேக் சைடு பிரவுன், பியர்ல் ஒயிட் மற்றும் மூன்டஸ்ட் சில்வர் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்