சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin!
Honda Africa Twin : ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு பைக் மாடலின் வடிவமைப்பை பதிவு செய்துள்ளது. அதாவது, ஹோண்டா நிறுவனம் தனது புதிய கெத்தான, ஸ்டைலான புதுப்பிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் பைக்கான ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் என்ற மாடலின் வடிவமைப்பு இந்தியாவில் பதிவு செய்துள்ளது.
Read More – கார் விரும்பிகளே எச்சரிக்கை… வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு.. இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?
ஆப்பிரிக்கா ட்வின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருப்பதால், இதில் சில மேம்படுத்தலுடன் ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சரான ஹோண்டா ஆப்ரிக்கா ட்வினை ஹோண்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன்படி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் முன்புறத்தில் சிறிய மாற்றங்களைப் பெற்றுள்ளது.
இரண்டு சஸ்பென்ஷன் வேரியண்ட்:
இந்த பைக்கில் இரண்டு சஸ்பென்ஷன் வேரியண்ட் உள்ளது. அதில் ஒன்று மேனுவல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மூலம் சஸ்பென்ஷனை சரிசெய்து கொள்ளலாம். இந்த ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 19 இன்ச் முன் சக்கரம் மற்றும் இருபுறமும் குறுகிய சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கை சாலை சார்ந்த மாடலாக நிலைநிறுத்த விரும்புவதால் இது செய்யப்பட்டுள்ளது.
சிறப்பசங்கள்:
ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 1,084சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. ஏர்பாக்ஸ், வால்வுகள் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்டர்களை மாற்றுவதன் மூலம் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், ECU அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Read More – உலகின் முதல் AI மென்பொருள் என்ஜினீயர் “Devin” அறிமுகம்… சிறப்பசங்கள் என்ன?
ட்வின்-பாட் மோட்டார் 7,500 ஆர்பிஎம்மில் 100.5 பிஎச்பியையும், 103 என்எம்மில் இருந்து 5,500 ஆர்பிஎம்மில் 112 என்எம் உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது. ஆறு வேக கையேடு மற்றும் ஆறு வேக இரட்டை கிளட்ச் தானியங்கி உட்பட இரண்டு கிளட்சி வகைகள் உள்ளன.
என்கேஸிங்குடன் திருத்தப்பட்ட LED ஹெட்லைட் அமைப்பைப் பெறுகிறது. DCT கியர்பாக்ஸ் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ES இரண்டும் ஒரு புதிய பவர்டிரெய்ன் மற்றும் ஸ்டைலிங்கில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் எப்போது அறிமுகம்?
இந்த டிசைன் டிரேட்மார்க் பதிவு மூலம், ஹோண்டா 2024 ஆப்ரிக்கா ட்வினை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாடல்களைப் போலவே, இதுவும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு பிக்விங் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!
பழைய மாடலுடன் ஒப்பிடும்போது விலை சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த மாடல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானியில் அறிமுகமான நிலையில், மிக விரைவில் அது இந்திய மண்ணிலும் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கானது மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக், மற்றும் பியர்ல் கிளேர் ஒயிட் போன்ற கலர்களில் வெளிவருகிறது.