mXmoto: புதிய எலக்ட்ரிக் பைக்.. 8 ரூபாய் செலவு செய்தால் 220 கி.மீ பயணம்..!
இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவையுடன், புதிய மாடல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்எக்ஸ்மோட்டோ(mXmoto) தற்போது தனது புதிய எலக்ட்ரிக் பைக் எம்எக்ஸ்மோட்டோ எம்16ஐ(mXmoto M16) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
M16 இ-பைக்கின் பேட்டரிக்கு MXmoto 8 வருட உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. இது தவிர, மோட்டாருக்கு 80,000 கிமீ வாரண்டியும், கன்ட்ரோலருக்கு 3 வருட வாரண்டியும் வழங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்ட இந்த இ-பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,98,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 160-220 கிமீ தூரம் செல்லலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒருமுறை அதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 1.6 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. 3 மணி நேரத்திற்குள் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 5 ரூபாய் செலவாகும் என்றால் கூட 1.6 யூனிட் மின்சாரத்திற்கு வெறும் ரூ. 8மட்டுமே செலவாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 160-220 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
பைக்கை பராமரிக்க 10 டிப்ஸ் .. இதோ..!
இந்த எலக்ட்ரிக் பைக்கில் 4,000 வாட் BLDC ஹப் மோட்டார் உள்ளது. இது 140Nm டார்க்கை உருவாக்குகிறது. இது எல்இடி பல்புகள் கொண்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப்களைக் கொண்டுள்ளது. M-வடிவ ஹேண்டில்பார் உள்ளது. பெட்ரோல் டேங்க் கீழே பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் பெட்டி காணப்படுகிறது. அதில் ‘M16’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
பைக்கின் நடுப்பகுதி முழுவதுமாக மூடப்பட்டு, அதில் வெள்ளி முலாம் பூசி எஞ்சின் உணர்வைக் கொடுக்க அந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆன் ரைடு காலிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டிபோன்ற அம்சங்கள் உள்ளன.