மின்சார கார் உலகில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிரு்கின்றன. ஜெர்மனியில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் விற்பனையை ஓவர்டேக் செய்து கோடி கட்டி பறக்கிறது டெஸ்லா மாடல் எஸ் காரின் விற்பனை.
இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கு இணையான சொகுசு வசதிகளுடன் முழுமையான மின்சார கார் மாடலாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் மின்சார வெர்ஷனாக இருக்கும்.
தனது புதிய மின்சார கார்களை EQ பிராண்டில் வெளியிட இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த புதிய காரை EQ S என்ற அடையாளத்துடன் களமிறக்க உள்ளது. மின்சார எஸ் க்ளாஸ் காராக இதனை புரிந்து கொள்ளலாம்.
டெஸ்லா கார்களின் அடிப்பாகத்தில் பெரிய அளவிலான பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதே பாணியில் பேட்டரிகள் பொருத்தப்படுவதுடன், எம்இஏ என்ற விசேஷ சேஸீயின் அடிப்படையில் இந்த புதிய மின்சார கார் கட்டமைக்கப்படும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த மாடலாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது.அதேநேரத்தில், இது எஸ் க்ளாஸ் போன்று இல்லாமல் பல்வேறு மாற்றங்களை பெற்ற நவீன மின்சார கார் மாடலாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.
ஆடி ஏ8 மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே உள்ளிட்ட கார்களின் மின்சார வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மாடல்களுக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQ S காா போட்டியாக இருக்கும்.