விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் மாருதி சுஸுகி. !!!
மாருதி சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கு விற்பனை திறனை பெற்று தரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார்.
அதை தொடர்ந்து புதிய சுஸுகி விட்டரா எஸ்யூவி என்ற காரை மாருதி சுஸுகி தயாரித்து வருகிறது. இதுவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது. இந்நிலையில், அந்த காருக்கான சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி இந்திய சாலைகளில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அப்போது வெளியான புகைப்படங்கள் மூலம், சுஸுகி விட்டாராவின் பரிபாலனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைவருக்கும் ஏற்ற ரூ. 10 லட்சம் மதிப்பிலான கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி முன்பே திட்டமிட்டுயிருந்தது. அதன்படி, சியாஸ் செடான் கார் 2014ம் ஆண்டிலும், மாருதி பிரிஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார் 2017ம் ஆண்டிலும் களமிறங்கி வெற்றிக்கொடி நாட்டின.
தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் பிரிஸ்ஸாவின் புதிய தலைமுறைக்கான காரின் பேட்ஜ் மறைக்கப்பட்டு, சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமே இது புதிய தலைமுறைக்கான மாடல் என்பது உறுதியாகிவிட்டது.
1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட சுஸுகி விட்டாரா கார் 116 பிஎச்பி பவர் ஆற்றலை வழங்கும். எஞ்சினின் சரியாக செயல்பாட்டிற்காக அது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த புதிய தலைமுறை சுஸுகி விட்டாரா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் தேவைக்கான 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் தேவைகளில் சுஸுகி விட்டாரா கார் விற்பனையில் உள்ளது.
இந்திய சந்தைக்காக இந்த புதிய தலைமுறை விட்டாரா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்டை மாருதி சுஸுகி பொருத்த அதிக வாய்ப்புள்ளது. இதே செயல்திறன் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்ஸா காரை போலவே இந்த சுஸுகி விட்டாரா கார் பெரிய பெட்டி போன்ற வடிவமைப்பில் உள்ளது. இருப்பினும் இதனுடைய உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் இன்னும் சிறப்பூட்டப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுஸுகி விட்டாரா காரை இந்திய சந்தைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி திட்டமிட்டால், அதை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வெளியிடலாம் என எதிர்பார்கக்ப்படுகிறது.
4,175 மிமீ நீளம், 1,775 மிமீ அகலம் மற்றும் 1,610 மிமீ உயரம் கொண்ட சுஸுகி விட்டாரா கார் 2500 மிமீ வீல்பேஸ் தேவையை பெற்றுள்ளது. இந்த அளவீட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது சுஸுகி விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு நேரடி சவாலாக களமிறக்கப்படலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மொத்தமாகவே நல்ல விற்பனை திறன் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கிரெட்டா தான் பெரிய விற்பனை திறனை இந்திய சந்தையில் அளித்து வருகிறது.
இந்நிலையில் அதையும் தீர்த்துக்கட்ட மாருதி சுஸுகி புதிய விட்டாரா கார் மூலம் முடிவு செய்திருப்பது தெரிகிறது. இருந்தாலும் இந்த கார் இந்தியாவில் வெளிவரும் பட்சத்தில் தான் ஆட்டம் ஆரம்பம்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.