மாருதி ஸ்விப்ட் காருக்கு குவியும் முன்பதிவு:
கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. விலை அறிவிப்புக்கு முன்னரே முன்பதிவு துவங்கிய நிலையில், இரண்டு மாதங்களில் மட்டும் 75,000 புக்கிங்குளை புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெற்றிருப்பதாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவு அதிகரித்து வருவதையடுத்து, இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் என்று சொல்லக்கூடிய முன்பதிவு செய்தது முதல் டெலிவிரி பெறுவதற்கான கால இடைவெளி வெகுவாக அதிகரித்து வருகிறது.
தற்போது தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து, சில வாரங்களில் துவங்கி அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீள்கிறது. அதேநேரத்தில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைந்து டெலிவிரி கொடுக்கும் பணிகளிலும் மாருதி தீவிரம் காட்டி வருகிறது.
மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பழைய மாடலிலிருந்து வடிவமைப்பிலும், வசதிகளிலும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் டாப் வேரியண்ட் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய கருப்பு வண்ண க்ரில் அமைப்பு காரின் வசீகரத்தை கூட்டுவதாக இருக்கிறது. சி பில்லர் அமைப்பில் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…