இந்திய விற்பனை சந்தையில் நம்பர்-1 இடத்தில் தொடர்ந்து 3 வது மாதமாக இருக்கிறது மாருதி டிசையர் கார். இது அந்த ரக காருக்கான விற்பனையில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கார் விற்பனையிலும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது.இந்த மாருதி டிசையர் கார் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து 3 மாதங்களாக முதல் நம்பர் -1 இடத்தில் இருக்கும் மாருதி டிசையர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 20,941 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 16,613 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இதே மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 17,291 ஸ்விப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. மாருதி டிசையரை பொருத்தவரை 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் இன்ஜினுடனும், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 190 டீசல் இன்ஜினுடனும் கிடைக்கிறது.
மேலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் வகைகளிலும் கிடைக்கிறது. இந்தியா ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்க தகவலின்படி பெட்ரோல் இன்ஜின் கார்கள் லிட்டருக்கு 22 கி.மீ வரையிலும், டீசல் இன்ஜின் கார்கள் லிட்டருக்கு 28 கி.மீ., வரையிலும் மைலேஜ் வழங்குகிறது.
இந்த ரக கார்களில் இது தான் அதிக மைலேஜ் தரும் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசூகி நிறுவனம் டிசையர் காரை 12 வகையான வெரியண்ட்களில் தருகிறது. ரூ 5,56,000 முதல் ரூ 9,43,000 வரை (டில்லி எக்ஸ் – ஷோரூம் விலைப்படி) இதன் விலை உள்ளது
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…