இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ‘Maruti Suzuki Invicto’..! வெளியானது அறிமுக தேதி..!
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புதிய மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் தயாரிக்கும் கார்களை சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்துவது வழக்கம் அந்த வகையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), அதன் புதிய தயாரிப்பான மாருதி சுஸுகி இன்விக்டோ-வை (Maruti Suzuki Invicto) அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி, இந்த மாருதி சுஸுகி இன்விக்டோ கார் ஜூலை 5ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாருதி சுஸுகி இன்விக்டோ வெளிப்புறம்:
இந்த இன்விக்டோ கார், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்ற வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். இதில், முன்புறம் இரண்டு ஸ்லேட் குரோம் கிரில், பம்பர் பொருத்தப்பட்ட எல்இடி, வைட் ஏர் டாம் (wide air dam) மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மாருதி சுஸுகி இன்விக்டோ இன்டீரியர்:
மாருதி சுஸுகி இன்விக்டோ, ஒரு நாற்காலி போல இருக்கும் ஓட்டோமான் இருக்கைகளுடன் இருக்கும். இதில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி இன்விக்டோ இன்ஜின்:
மாருதி சுஸுகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் போன்ற பவரைக் கொண்டிருக்கும். இன்விக்டோ 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 171hp பவர் அவுட்புட் மற்றும் 205Nm உச்சகட்ட டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.1 km மைலேஜை வழங்கும்.
மாருதி சுஸுகி இன்விக்டோ எதிர்பார்க்கப்படும் விலை:
விலையைப் பொறுத்தவரை மாருதி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸை விட அதிக விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னோவா ஹைக்ராஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.55 லட்சத்தில் தொடங்கி ரூ.29.99 லட்சம் வரை உள்ளது. இதே போல மாருதி இன்விக்டோ காரின் விலையும் ரூ.29.99 லட்சம் வரை இருக்கலாம்.