மாஸ் காட்ட வருகிறது மாருதி சுசுகி…!!! பலத்தை காட்டுமா பலேனோ ஃபேஸ்லிஃப்ட்…!!! மாருதியின் மகிமை மக்களிடம் மாஸ் காட்டுமா?…!!!

Default Image
இந்தியாவில் தயாரான மாருதி நிறுவனம் ஆம்னி ரக கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற அந்நிறுவனம் தற்போது அதன் உற்பத்தியை  நிறுத்தியுள்ளது.இந்நிலையில்  மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் ரக  காரினை இந்தியாவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது.
Related image
மேலும் நெக்சா விற்பனையாளர்கள் புதிய பலேனோ காருக்கான முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக  தகவல்கள் கூறப்படுகிறது.இந்த பலேனோ ஃபேஸ்லிஃப்ட் ரக  காரை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.11,000 முதல் ரூ.21,000 வரை செலுத்தி முன்பதிவு செய்யலாம்  என கூறப்படுகிறது.இந்த  புதிய பலேனோ காரின் விநியோகம் அடுத்த மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
Related image
இந்த வகையில் இந்த புதிய காரின் முன்பக்க பம்ப்பர் முற்றிலும் புதிய வடிவமைப்பாக  உருவாகப்பட்டு இருக்கிறது.இந்த  காரின் முன்புறம் மற்றும் பின்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள  நிலையில், புதுவித அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஷார்க் ஃபின் ஆன்டெனா மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் இதில்  வழங்கப்படுகிறது.இந்த புதிய பலேனோ காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.மேலும் இதில்  டீசல் மோட்டார் 75 பி.எஸ். மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறனும் ரெட்ரோல் மோட்டார் 84 பி.எஸ். மற்றும் 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Image result for maruti suzuki baleno facelift 2019
இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரின்  விலையை பொருத்த வரை புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதைய மாடலை விட ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய பலேனோ கார் துவக்க விலை 5.38 லட்சம் ருபாயில்  துவங்கி டாப் எண்ட் மாடல் 8.50 லட்சம் ருபாய்  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மாருதி வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்