ஒவ்வொரு இந்தியரின் கனவு காராக விளங்கும் மாருதி ஆல்டோ!விற்பனையில் புதிய சாதனை …..
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ இந்தியாவின் கனவு காராக விளங்கி வரும் நிலையில் , விற்பனையில் 35 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் புதிய புதிய கார் நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனினும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் விற்பனை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோவிற்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது.
இந்திய நடுத்தரக் குடும்பத்தின் விருப்பமிக்க காராக இது விளங்குகிறது. குறைவான பராமரிப்புச் செலவும் நம்பகத்தன்மையான ரீ-சேல் மதிப்பும் ஆல்டோவின் மவுசுக்கு முக்கிய காரணங்கள்.
மாருதி ஆல்டோ கார் 2000-ல் இருந்து தற்போது வரை இந்த காரின் விற்பனை தொடர்ந்து சாதனைப் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்துடன், இந்த கார்களின் விற்பனை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. மாருதி சுசுகியின் ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே 10 என இரண்டு விதங்களில் கிடைக்கிறது.
ஆல்டோ வாடிக்கையாளர்களில் 25 சதவீதம் பேர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். குறிப்பாக முதன்முறையாக கார் வாங்க விரும்பும் இந்தியர்களின் கனவு காராக மாருதி சுசூகி விளங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.