SUV கார் விற்பனையில் சரிவை சந்தித்த மாருதி நிறுவனம்! முந்திய மஹிந்தரா
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது.
ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி தள்ளப்பட்டது.
இதனால் 2023 டிசம்பரில் பிரெஸ்ஸா AT காரை தவிர்த்து மாருதியின் மற்ற அனைத்து கார்களுக்கும் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டன. பல்வேறு SUV மாடல் கார்கள் மற்றும் அதிகமான தயாரிப்பு திறன் ஆகியவை காரணமாக கடந்த செப்டம்பரில் மஹிந்தரா நிறுவனம் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.