மக்களின் மனங்களை மகிழ்விக்க வருகிறது மகேந்திரா XUV…!!!முன்பதிவு தொடங்கியது …!!! அடுத்த மாதம் சந்தைக்கு வருகிறது..!!!!
தற்போது உலக அளவில் மிகப்பெரிய கார் சந்தையாக இந்திய சந்தை உள்ளது. எனவே இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது .இந்த புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இது நாடு முழுக்க உள்ள அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் தற்போது முன்பதிவு தொடங்கி நடைபெறுகிறது.இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 ரக கார் இந்தியாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த கார் புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.மேலும் புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வித்தியாசங்களில் கிடைக்கும்.
இந்த புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.
மேலும் இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.