இந்தியாவில் களமிறங்குகிறது லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் கார்.! எப்போது தெரியுமா.?

Lotus Emira

புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus), நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவை அறிவிக்க உள்ளது. இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் சேவையை கையாள புதுடெல்லியில் உள்ள பிரத்யேக மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீன வாகன நிறுவனமான ஜீலி ஆட்டோமோட்டிவ்க்குச் சொந்தமான லோட்டஸ் நிறுவனம், எந்தெந்த வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளது என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், விற்பனைக்கு வரும் முதல் இரண்டு மாடல்கள் பெட்ரோலில் இயங்கும் எமிரா ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எலக்ட்ரிக் எலெட்ரே எஸ்யூவியாக இருக்கலாம் என்று ஒருபுறம் கூறப்படுகிறது.

இந்த இரண்டு கார்கள் வெளியான பிறகு, மேலும் சில மாடல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். அதில் எந்தெந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படும், அந்த கார்களுக்கான முன்பதிவு மற்றும் அதற்கான டெலிவரி எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரியவரலாம்.

எமிரா

எமிரா என்பது லோட்டஸ் நிறுவனத்தின் ஒரு இலகுரக ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். எமிரா  இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. அதன்படி, இதில் இருக்கக்கூடிய 2 லிட்டர், 4 சிலிண்டர் மெர்சிடிஸ் சோர்ஸ் இன்ஜின், 366PS (ஹார்ஸ் பவர்) மற்றும் 430Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4.4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.

இரண்டாவது மாடலில் உள்ள 3.5 லிட்டர் டொயோட்டா வி6 எஞ்சின், 405PS (ஹார்ஸ் பவர்) மற்றும் 430Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் இந்த மாடல், 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டுவதோடு, மணிக்கு 290 கிமீ வேகத்தில் செல்லும். லோட்டஸ் எமிராவின் எடையை 1,405 கிலோ ஆகும்.

எலெட்ரே எஸ்யூவி

எலெட்ரே எஸ்யூவி என்பது ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இது எலெட்ரே, எலெட்ரே எஸ் மற்றும் எலெட்ரே ஆர் என்கிற மூன்று மாடல்களில் உள்ளது. இந்த மூன்று மாடல் கார்களும் 109 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 600கிமீ தூரம் வரை செல்ல முடியும். 47 சதவீதம் எஃகு மற்றும் 43 சதவீதம் அலுமினியத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கார் சுமார் 2,520 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த இரண்டு மாடல் கார்களும் மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்