இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் பயன்படும் கார் பிராண்டுகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், டாடா, ஹோண்டா, மாருதி, பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்கின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கும் கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆட்டோமொபைல் பிரிவில் ஹோண்டா கார் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த நிறுவனங்களின் பொதுப் பிரிவு பட்டியலில் 7வது இடத்தை ஹோண்டா கார் நிறுவனம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பிரிவில் 6வது இடத்தில் இருந்த ஹோண்டா கார் நிறுவனம் இந்த ஆண்டு ஒரு இடம் சறுக்கி 7வது இடத்தில் இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் பிரிவு என்று வரும்போது தொடர்ந்து
இரண்டாவது இடத்தில் மாருதி கார் நிறுவனம் உள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த நிறுவனங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த மாருதி நிறுவனம் இந்த ஆண்டு 3 இடங்கள் சறுக்கி 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு 45 வது இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூ 30 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 15வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. சொகுசு கார் பிரிவில் பிஎம்டபிள்யூ முதலிடத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் உள்ளடக்கிய டாடா குழுமம் 4வது இடத்தில் இருக்கிறது.
இருசக்கர வாகனப்பிரிவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், இருசக்கர வாகனப் பிரிவில் பஜாஜ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் 16 நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
9,000 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,000 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த 1,000 நிறுவனங்இந்த பட்டியல் 15,000 மணி நேர மனித உழைப்பில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக டிரஸ்ட் அட்வைசரி அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…