இனிமேல் மின்னல்வேக பயணம்.. வந்துவிட்டது புதிய ‘Yamaha R3’..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!
யமஹாவின் புதுப்பிக்கப்பட்ட Yamaha R3 பைக்குகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் பிரியர்கள் அதிகமாக உள்ளது போலவே, இருசக்கர வாகன பிரியர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். அவர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக வாகனங்களை தயாரிக்கும் மோட்டார் நிறுவனங்களும் தாங்கள் உருவாக்கும் பைக்குகளில் பலவித மாற்றங்கள் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன.
அந்த வகையில், இருசக்கர வாகன உலகில் அனைவரது மனதையும் கவர்ந்த யமஹா மோட்டார், 2023ம் ஆண்டிற்கான Yamaha R3 பைக்குகளை புதுப்பித்துள்ளது. ஜப்பானில் புதுப்பிக்கப்பட்ட இந்த R3 பைக்குகளில் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் யமஹாவின் டீலர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்ட R3 ஆனது சந்தையில் விற்கப்பட்ட சில நாட்களிலேயே சந்தையில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் R3 இன் புதுப்பிக்கப்பட்ட MY2023 மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்காக சந்தைகளில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Yamaha R3 ஆனது, 321 cc பேரலல்-ட்வின் என்ஜினுடன் 10,750 rpm இல் 41 bhp ஆற்றலையும், 9,000 rpm இல் அதிகபட்சமாக 29.5 Nm டார்க்கையும் (Torque) கொண்டுள்ளது.
மேலும், இந்த இன்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் சுமார் 6 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும். தற்போதைய BS4 Yamaha YZF-R3-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.51 லட்சம் ஆகும். புதுப்பிக்கப்பட்ட R3 சுமார் ரூ.3.7 லட்சம் முதல் ரூ.3.9 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.