புதிய மாருதி எர்டிகா கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!
புதிய வடிவமைப்பு,புதிய வசதிகளில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வரும் மாருதி எர்டிகா கார் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது
இந்தோனேஷியாவில் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட புதிய மாருதி எர்டிகா குறித்த வீடியோ இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
புதிய மாருதி எர்டிகா கார் தற்போதைய மாடலைவிட நீள, அகலத்தில் அதிகரிக்கப்பட்டு சற்று பெரிய காராக வர இருக்கிறது. புதிய முகப்பு க்ரில் அமைப்பு, பம்பர், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விலக்குகள், புதிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதிக இடவசதி மற்றும் குறைவான எடையுடன் வர இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்கள் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு எஞ்சின்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும். அதேநேரத்தில், புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக ஒரு தகவல் வருகிறது. புதிய மாருதி எர்டிகா காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
மூன்றாவது வரிசை இருக்கை இடவசதியும் சற்றே மேம்பட்டிருக்கும். இந்த மாதம் 19ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தோனேஷிய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி எர்டிகா கார் பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.