அதிரடியான டிஸ்கவுண்டுகளுடன் இந்தியாவில் அறிமுகமானது Kawasaki Ninja 500!

Kawasaki Ninja 500

Kawasaki Ninja 500 : பைக்கர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கவாஸாகி நின்ஜா 500 இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமானது. சமீபத்தில், EICMA 2024 என்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கவாஸாகி நின்ஜா 500 பைக் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கியுள்ளது.

இதற்கு முன் கவாஸாகி நிஞ்ஜா 400 பைக் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு, ரைடர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது அடுத்த வெர்சனான கவாஸாகி நிஞ்ஜா 500 அறிமுகமானதால் பைக்கர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது புதிய மாடல் நின்ஜா, ஏற்கனவே வெளிவந்த 400-இன் மாறுபாடு ஆகும்.

Read More – டாப் கியரில் பஜாஜ் வாகனங்கள்.! ராயல் என்ஃபீல்டு நிலைமை என்ன.?

ஜப்பானிய நிறுவனம் இந்திய சந்தையில் நிலையான மாறுபாட்டை இந்த புதிய பைக் மூலம் கொண்டுவந்துள்ளது. எலிமினேட்டர் 500, இசட்900 மற்றும் இசட்650 ஆர்எஸ்களுக்குப் பிறகு புதிய வரிசையைக் கொண்டிருக்கும் பிராண்டின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கவாஸாகி நின்ஜா 500 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி நிஞ்ஜா 500 அம்சங்கள்:

இந்த கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்கானது எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது ஒரு சிக்னேச்சர் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தை கொண்டுள்ளது. அதிக வேகத்தில் செல்லும்போது பைக்கர்கள் வசதிக்காக சிறிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது.

Read More – இந்தியர்களிடம் எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறும் மவுசு! ஏன் தெரியுமா?

பைக் முன்பு ஃபெண்டர் மற்றும் ஃபேரிங் ஆகியவை ஸ்டைலிங் மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் சேர்க்கப்பட்டுள்ளது. நின்ஜா 500 மாடல் பைக்கில், புதிய லிக்விட் – கூல்டு 451சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது, 9,000 ஆர்பிஎம்மில் 45எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்மில் 42.6என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. இந்த பவர் யூனிட் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் வேலை செய்கிறது. பைக் ப்ராக்ஸிமிட்டி ஆக்டிவேஷன் ஸ்டார்ட் சிஸ்டம், டூயல்-சேனல் ஏபிஎஸ், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

Read More – அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

எனவே, கவாஸாகி நிஞ்ஜா 500 மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நிஞ்ஜா 500 இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலை இருக்கும் நிலையில், அந்த சலுகையானது மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்