மீண்டும் களமிறங்கும் ஹீரோ கரிஷ்மா..! அசத்தப்போகும் ஸ்போர்ட்டி வடிவமைப்புடன் புதிய XMR 210..!

Hero XMR 210

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Hero MotoCorp நிறுவனம், Hero Karizma XMR 210 என்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதை விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் டீலர் நிகழ்வில் புதிய கரிஸ்மா பைக் காட்சிப்படுத்தப்பட்டது.

Hero karizma
Hero karizma [Imagesource : Twitter/@ravanaaar]

2003 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Karizma ZMR, இளைஞர்களை பெரும்பாலும் ஈர்த்தது. இது நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. பைக்கில் பல புதுப்பிப்புகளை செய்த போதிலும் காலப்போக்கில் விற்பனை மந்தமாகத் தொடங்கியது. இதனால் 2019 இல் நிறுவனம் அதன் தயாரிப்பை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Hero Karizma XMR 210: 

இந்த Hero Karizma XMR 210 பைக்கானது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இயங்கும் 210சிசி லிக்விட்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இதன் ஆற்றல் சுமார் 25PS மற்றும் 20Nm இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hero XMR
Hero XMR [Imagesource : Team-Maxabout]

கரிஸ்மா எக்ஸ்எம்ஆரின் அலாய் வீல்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் மற்ற ஹீரோ தயாரிப்புகளில் இருப்பதை விட தடிமனான டயர்களுடன் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் இரண்டு முனைகளிலும் ஏபிஎஸ் ரிங்க்களைக் கொண்டிருப்பதால், டூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐக் கொண்ட முதல் ஹீரோ தயாரிப்பாக இருக்கலாம்.

Hero Karizma XMR 210
Hero Karizma XMR 210 [Imagesource : Team-BHP]

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் விலை :

Karizma XMR 210 இந்தியாவில் 2023 நவம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.6 லட்சம்  முதல் ரூ.1.8 லட்சம் வரை இருக்கலாம். இந்த பைக் Yamaha R15 V4, Suzuki Gixxer SF 250, பஜாஜ் பல்சர் F250 மற்றும் யமஹா FZ25 போன்றவற்றுடன் போட்டியிடும் வகையில் வெளிவரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்