ஜப்பானிய தொழில்நுட்பம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்.! அசத்தும் Komaki Ranger.!

Komaki Ranger

Komaki Ranger : ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரி பைக்கான Komaki Ranger அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் வரவு அதிகரித்து வரும் நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு, செலவினம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் புது புது எலெக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளை தயாரித்து வருகிறது.

Read More – தீபாவளி பரிசாக புத்தம் புது பைக்கை களமிறக்கும் பஜாஜ்.! இனி மைலேஜ் பற்றி கவலையேயில்லை..!

அந்தவகையில், தற்போது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Komaki Ranger பைக் அறிமுகமாகியுள்ளது. அதாவது, கோமாகி நிறுவனம் தனது ரேஞ்சர் எலக்ட்ரிக் க்ரூஸரை, ரேஞ்சர் XE மற்றும் டாப்-எண்ட் ரேஞ்சர் எக்ஸ்பி என இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்த பைக் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட்போன் இணைப்புடன் 7 இன்ச் டிஎஃப்டி திரையைப் பெற்ற முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் கோமாகி ரேஞ்சர் ஆகும். அதில் மேப் மற்றும் புளூடூத் அழைப்பு ஆகியவை உள்ளது. Komaki Ranger பைக்கில் 5kW ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 80kmph என்ற அதிகபட்ச வேகத்தைக் கொண்டுள்ளது.

Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!

எலெக்ட்ரிக் க்ரூஸரில் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. USB சார்ஜிங் போர்ட், சைட் ஸ்டாண்ட் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோட் மற்றும் ‘கியர் மோட்’ ஆகியவற்றைப் பெறுகிறது. கூடுதலாக, இது ஒரு குஷன் பிலியன் பேக்ரெஸ்டையும் கொண்டுள்ளது.  இரண்டு சைலன்சர் உட்பட XE ஆனது 30-லிட்டர் சேமிப்புத் திறனும், XP ஆனது 50-லிட்டர் சேமிப்புத் திறனுடன் வருகிறது.

எலக்ட்ரிக் க்ரூஸரில் டெலஸ்கோபிக் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கியுள்ளது. ரேஞ்சர் XE பைக்கானது 160-180 கிமீ வரையும், அதே சமயம் ரேஞ்சர் எக்ஸ்பி 200-250 கிமீ வரையும் செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 4 மணி நேரத்தில் 0-90% ஆகிவிடும். இதனால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வேகத்தில் 250 கிமீ வரை செல்லலாம் என கூறப்படுகிறது.

Read More – நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!

ரேஞ்சர் XE விலை ரூ.1,68,000, டாப்-எண்ட் ரேஞ்சர் எக்ஸ்பி ரூ.1,85,000 ( எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. எனவே,  கோமாகி ரேஞ்சர் ஒரு ஸ்டைலான, வசதியான மற்றும் பல்வேறு அம்சம் நிறைந்த எலக்ட்ரிக் க்ரூஸரை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். மேலும், Komaki ரேஞ்சர் ஒரு த்ரில் மற்றும் பின்புற சீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்