இஸ்ரோ புதியதிட்டம்!குறைந்தவிலையில் பேட்டரி தயாரிக்கும் தொழில்நுட்பம்…..
இஸ்ரோ குறைந்த விலையில் பேட்டரி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான லித்தியம் – அயான் பேட்டரிகள் ஜப்பான் அல்லது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் வாகனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகமாகிறது. ஆனால் இஸ்ரோ தனது விண்வெளித் திட்டங்களின் தேவைகளுக்காக மலிவு விலையில் பேட்டரிகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக் கோள்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சோதனை அடிப்படையில் இந்த வகை பேட்டரியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மலிவு விலை பேட்டரிகளுக்கான தொழில்நுட்பத்தை ஆட்டோ மொபைல் சந்தைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டுக்காக கண்டறியப்பட்ட தொழில்நுட்பம் சாலைக்கு வருவதால் இந்தியாவில் மின்சார வாகன சந்தை விரைவாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.