ராயல் என்பீல்டு(Royal Enfield ) பைக்கின் புதிய எஞ்சின் அறிமுகம் :பிஎஸ்-6 (PS-6)

Default Image

 

பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்கள் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் வர இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருக்கின்றன.

இந்த நிலையில், க்ளாசிக், தண்டர்பேர்டு, புல்லட் உள்ளிட்ட மாடல்களையும் பிஎஸ்-6 தர நிர்ணயத்திற்கு இணையான எஞ்சினுடன் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் சில விஷயங்கள் குறைபாடாக போட்டியாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் தரமான உதிரிபாகங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், ஏபிஎஸ் தவிர்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், அடுத்த மாதத்திலிருந்து இந்தியாவில் 125சிசிக்கு மேலான இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட இருப்பதால், புதிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறும்.

மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்காக, ராயல் என்ஃபீல்டு 350சிசி மோட்டார்சைக்கிள்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சினுடன் வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், விரைவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மிகச் சிறப்பான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும். அதேசமயத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்படுவதால், விலையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Introduction to the Royal Enfield bike: PS-6 (PS-6)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்