இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் கார் கலெக்ஷன்கள்..!

Published by
Dinasuvadu desk

 

உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும்  சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவரிடம் உள்ள மாருதி 800 காரில் இருந்து சூப்பர் கார் வரை அவரது கார் கலெக்ஷன்களை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்ப்போம்.

கிரிக்கெட் உலகில் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் வளம் வரும் நமது “மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சினிற்கு கார்கள்  மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் முதன் முதலில் வாங்கிய காரை கூட இன்னும் பத்திரமாகவே வைத்துள்ளார்.

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை அவர் வாங்கிய கார்கள் குறித்தும் அவரது கராஜில் உள்ள கார்கள் குறித்து இந்த சச்சினின் பிறந்த நாள் ஸ்பெஷல் செய்தியில் பார்க்கலாம் வாருங்கள். மாருதி 800 சச்சனின் வாங்கிய முதல் கார் இந்த மாருதி 800 தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கியுள்ளார். முதலில் இந்த காரில் தான் வளம் வந்துள்ளார். பின்னர் அவரது கராஜில்உள்ள கார்களின் வளர்ச்சியை கீழே காணுங்கள்.

டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்த போது ஃபியட் நிறுவம் சச்சினிற்கு இந்த காரை பரிசளித்தது. கடந்த 2011ம் ஆண்டு சச்சனின் இந்த காரை சூரத்தில் உள்ள ஒரு பிஸ்னஸ் மேனிற்கு இதை விற்று விட்டார்.

நிஸான் ஜி.டி.-ஆர் 2011ம் ஆண்டு ஃபெராரி காரை விற்ற பின்பு சச்சின் இந்த நிஸான் ஜி.டி.-ஆர் காரை வாங்கினார். இந்த கார் சுமார் 300 கி.மி., வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரில் லாஞ்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது. பி.எம்.டபிள்யூ ” 30 ஜாரே எம்5″ லிமிட்ட் எடிசன் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 30வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த காரை தயாரித்தது. இந்த மாடல் கார் உலகிலேயே 300 கார்கள் மட்டும் தான் தயாரானது. தற்போது பிஎம்டபிள்யூ கார்களிலேயே அதிக பவராகன கார் இது தான். இந்தியாவில் சச்சனிடம் மட்டும் தான் இந்த கார் உள்ளது.

இந்த கார் 4.4 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டது. இது 600எச்பி பவர் வெளிப்படுத்தக்க கூடியது. பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 இந்த கார் இந்தியாவில் வெளியடுதற்காகவே தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த காரை வெளியிடுதற்கு முன்பாகவே சச்சின் இதை பெற்றுவிட்டார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் இருப்பதால் அவருக்க முதலிலேயே வழங்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எம்50டி இது உலகிலேயே அதிக பவர்புல் டீசல் எஸ்யூவி காராக இருந்தது. இந்த காரில் 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜிடு இன்ஜின் அமைந்துள்ளது. இது 381 எச்பி பவர் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ., வேகத்தை 5.3 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் இந்தியாவில் விற்பனை இல்லை. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சினிற்காக இந்தியாவில் இறக்குமதி செய்தது. பிஎம்டபிள்யூ 760எல்ஐ இது சச்சினிடம் உள்ள செடன் ரக கார். இந்த காரின் ஸ்பெஷல் என்ன என்றால் இந்த காரின் சீட்டில் தலை வைக்கும் பகுதிகளிலும், டோர் சீல் பகுதிகளிலும் அவரது இன்சியல் பொறிக்கப்பட்டிருக்கும்.

பி.எம்.டபிள்யூ ஐ8 இந்த கார் உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று, இது சூப்பர் கார் வெரைட்டியை சார்ந்தது. இது குறித்து சச்சின் கூறும்போது “இது தான் நான் இது வரை ஓட்டியதிலேயே தலை சிறந்த கார். சிலர் நான் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதால் இப்படி கூறுவதாக நினைக்கலாம். ஆனால் நான் எனது நண்பர்களின் ஃபெராரி, லாம்போகினி ஆகிய கார்களையும் இயக்கியுள்ளேன்.” என கூறினார். பிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட் இந்த கார் சச்சனின் காரஜில் 2015ம் ஆண்டு இனைந்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

1 hour ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

3 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

4 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

4 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

4 hours ago