பகைமை பாராட்டிய சீனாவுடன் பாசம் காட்டும் மோடி…!!! வளைக்குடா நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் புதிய முடிவு…!!!
நம் பகை நாடான சீனாவுடன் இந்தியா திடீரென கை கோர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் அரபு நாடுகளை காலி செய்யும் நமது பாரத பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் ஒன்றும் அடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் உலகில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருமட்டங்காகிக் கொண்டே செல்கிறது.
இதன் காரணமாக வாகனங்கள் இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆனால் இந்தியா, சீனா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளிடம் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் இல்லை. எனவே வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் அவை கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன.என்றாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதால், அந்நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்தியாவை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாயை செலவிடுகிறது
இதன் காரணமாக சில சமயங்களில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விடுகிறது. இந்தியா மட்டுமல்லாது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் உலகின் அனைத்து நாடுகளும் இந்த பிரச்னையால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதிலும் குறிப்பாக அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால், மிக அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இவ்விரு நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை இரு நாடுகளின் அரசுகளும் ஊக்கப்படுத்தி கொண்டுவருகின்றன.
உதாரணமாக சீனாவில் செயல்படும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் குறைந்தபட்சம் 10 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்களையாவது உற்பத்தி செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும் வெகுவாக குறைக்க முடியும். 2018ம் ஆண்டு நிலவரப்படி, உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
எனவே இந்த நடவடிக்கையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்,கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்கவும் பகை நாடுகளிடையே பாசம் பாராட்ட உள்ளனர்.
DINASUVADU.