ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரி குறைப்பு… புதிய EV கொள்கைக்கு ஒப்புதல்!
EV policy : மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
Read More- கிளாசிக் விரும்பிகளே ரெடியா? விரைவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650…வெளியான புதிய தகவல்!
பல்வேறு முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரி கார், பைக் என புதிய புதிய மாடல்களை சந்தையில் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாக அறிமுகமாகும் எலெக்ட்ரிக் வாகனகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான விமர்சனங்கள் இருந்தாலும், அதை விரும்புபவர்களின், வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தான் வருகிறார்.
இந்த சுழலில், நிறுவனங்கள் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்ககும் புதிய EV கொள்கைக்கு அரசு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான இந்த கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!
அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெஸ்லா போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய மின்சார வாகன (EV) கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய EV கொள்கையின் கீழ், நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி ($500 மில்லியன்) முதலீடு செய்ய வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட வசதிகளை அமைக்க வேண்டும். அப்படி ஆலைகளை நிறுவும் நிறுவனங்கள் குறைந்த சுங்க வரியில் கார்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும். அவர்கள் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைத்து 5வது ஆண்டில் 50% உள்ளூர்மயமாக்கல் நிலையை அடையலாம். மேல் முதலீட்டு வரம்பு இருக்காது.
Read More – இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..
இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு 15% குறைக்கப்பட்ட சுங்க வரியில், மின் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. ஆனால், வாகனங்கள் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பு $35,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இது காரின் மதிப்பைப் பொறுத்து தற்போதைய இறக்குமதி வரியான 70% அல்லது 100% இல் இருந்து குறிப்பிடத்தக்க குறைப்பைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கை டெஸ்லாவின் சந்தை நுழைவுத் திட்டங்களை மேம்படுத்தும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8,000 EVகளுக்கு மேல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்காக இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.