ஹூண்டாயின் தரமான படைப்பு..அட்டகாசமான வடிவமைப்புடன் ‘EXTER SUV’..! எப்போது அறிமுகம் தெரியுமா..?
ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய எக்ஸ்டெர் எஸ்யூவியின் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனம் தான் ஹூண்டாய். இந்த நிறுவனம் வாகன பிரியர்களுக்கு தேவையான மற்றும் அவர்கள் விரும்பும் வகையில் கார்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. அதோடு பயனர்களின் பாதுகாப்பிற்காக பல பாதுகாப்பு அம்சங்களையும் புகுத்தி வருகின்றன.
The attractive design philosophy of the #HyundaiEXTER continues at the rear too. This SUV’s bold looks along with a prominent rear skid plate will surely make heads turn.
Think outside. Think EXTER.
Know more: https://t.co/JgP6L0NrZQ#HyundaiIndia #Thinkoutside #ILoveHyundai pic.twitter.com/n8hFj1tc66— Hyundai India (@HyundaiIndia) May 30, 2023
தற்பொழுது, ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் அதன் புதிய எக்ஸ்டெர் எஸ்யூவியின் (Hyundai Exter SUV) வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த எக்ஸ்டெர் எஸ்யூவியில் வரவிருக்கும் பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்களை காணலாம்.
எக்ஸ்டெர் எஸ்யூவியின் வடிவமைப்பு:
ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவியின் (Hyundai Exter SUV) முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள விளக்குகளில் எச் (H) வடிவத்தில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பின்புறத்தில் மேற்பகுதியில் சுறாவின் துடுப்பு போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவியில் ஐந்து பேர் அமர முடியும்.
இதில் குரல் மூலமாக இயங்கக்கூடிய ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் (sun roof) மற்றும் இரண்டு கேமராக்கள் கொண்ட டாஸ்கேமுடன் வருகிறது. இது 5.84 செ.மீ எல்சிடி டிஸ்பிலே மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு சார்ந்த இணைப்புகளான ஜிபிஎஸ், ப்ளூதூத் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் தெளிவான புகைப்படம், முழு தெளிவுடைய வீடியோவை பதிவு செய்து கொள்ளலாம்.
ஹூண்டாய் எக்ஸ்டர் வகை:
ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவி EX, S, SX, SX(O) மற்றும் SX(O) Connect என்ற ஐந்து வகைகளில் கிடைக்கும். இது தனித்துவமான நிறமான ‘ரேஞ்சர் காக்கி’ நிறத்துடன் வரவுள்ளது. இந்த வண்ணம் இயற்கையின் அழகு மற்றும் பசுமையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் இன்ஜின்:
ஹூண்டாய் எக்ஸ்பிரஸ் எஸ்யூவி 2 இன்ஜின் வகையான என்ஜின்களைக் கொண்டுள்ளது. அதில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் அளவுள்ள இரு எரிபொருள் கப்பா (Bi-fuel Kappa) பெட்ரோல் உடன் CNG யில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் ஐந்து வேகம் மாறுபாடுகள் கொண்ட மெனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (AMT) வருகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஹூண்டாய் எக்ஸ்டெர் எஸ்யூவியில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வாகன நிலைத்தன்மை மேலாண்மை மற்றும் எச்ஏசி (ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல்), 3-பாயின்ட் சீட் பெல்ட் கொண்டுள்ளதோடு அனைத்து இருக்கைகளிலும் சீட்பெல்ட் அணியாமல் இறுக்கியும் நினைவுவூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டெர் அறிமுகம் மற்றும் விலை:
இந்தியாவில் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள ஹூண்டாய் எக்ஸ்டெரின் எதிர்பார்க்கப்படும் விலை இந்திய சந்தையில் ரூ.6 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது இந்திய சந்தையில் டாடா பஞ்ச் (Tata Punch) மற்றும் மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.