சோதனை ஓட்டம் நடத்தியது ஹூண்டாய் நிறுவனம்….!!

Default Image

 

ஹூண்டாய் ஐ10, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 ஆகிய கார்களைவிட விலை உயர்வான ஹேட்ச்பேக் மாடல் ஹூண்டாய் ஐ30. ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் விலை அடிப்படையில் இந்திய மார்க்கெட்டிற்கு சரிபடாது கருத்து நிலவுகிறது. இந்த சூழலில், இந்தியாவின் கார் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதையடுத்து, பிரிமியம் அம்சங்களுடன் கூடிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காரின் ஹேட்ச்பேக் மாடலான ஐ30 கார் மிகவும் பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது. பொதுவாக ஹேட்ச்பேக் கார்கள் 4 மீட்டர்கள் நீளத்திற்குள் இருக்கும். ஆனால்,இந்த ஹூண்டாய் ஐ30 காரின் நீளம் 4 மீட்டரை தாண்டுகிறது. மிட்சைஸ் எஸ்யூவிகளுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை பெற்றிருக்கிறது.

மிகவும் தாராள இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஐ30 காரில் ரேடார் அடிப்படையில் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் என்று பிரிமியம் வசதிகளை அளிக்கிறது.

நம் நாட்டில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் ஐ30 கார் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்பது அதில் பொருத்தப்பட்டு இருக்கும் அடையாள பட்டை மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய ஐ30 கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு மேலான விலையிலும், அம்சங்களிலும் நிலைநிறுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்