ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு மத்தியில் பிரீமியம் ரேசர் பைக்குகளை Husqvarna நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 என்ற லேட்டஸ்ட் வெர்ஷன் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது சூப்பர் மாடல் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக்குகள் ஒரு Scrambler மற்றும் ஆப் ரோடு கலந்த வகையில் இமாலய பைக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், Husqvarna பைக்குகள் KTM நிறுவனத்தின் டியூக் சார்ந்து உருவாக்கப்பட்டவை.
இதனால், அந்நிறுவனத்தின் பைக்குகள் இந்தியாவில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று பைக் விரும்பிகள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒப்புதல் சான்றிதழ் வெளியான நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த பெரிய வெளியீடு Svartpilen 250 மாடல் பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 250 மாடல் ஏற்கனவே வெளிவந்த Vitpilen 250 மாடலில் உள்ள இயங்குதளம் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வடிவமைப்பு Svartpilen 401 மாடலை போலவே இருக்கும் என கூறப்படுகிறது.
இதுபோன்று, முன்பு இருப்பது போல் இந்த பைக்கும் LCD இன்ஸ்ட்ரூமென்ட்டை கொண்டிருக்கும். இந்த புதிய Svartpilen 250 பைக்கானது KTM 250 டியூக்கில் இருந்து பெறப்பட்ட 249cc, லிக்விட்-கூல்டு, SOHC இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது 9,000இல் 31bhp மற்றும் 7,250rpm இல் 25Nm உச்சகட்ட பவரை வெளிப்படுத்தும். மேலும், இந்த பைக் ஒரு ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இடைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2024 Husqvarna Svartpilen 250 பைக்கானது 5 இன்ச் எல்சிடி திரையுடன் ப்ளூடூத் இணைப்பு, ரைடு பை வயர் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல், க்விக்ஷிஃப்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் சூப்பர்மோட்டோ மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
Husqvarna Svartpilen 250 பைக் விலை ரூ.1.80 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்வீடிஷ் பிரண்டான Husqvarna நிறுவனம் இந்திய சந்தையில் பல மாடல் பைக்குகளை அறிமுகம்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அந்நிறுவனத்தின் பைக்குகளை கேடிஎம் ஷோரூம்களில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…