வீட்டில் இருந்தபடியே ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

Published by
கெளதம்

பழகுநர் – ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க…

நாடு முழுவதும் ஒவ்வொரு ஓட்டுனரும் தங்களுக்கென ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பிறந்ததும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டிவிட்டீர்கள் என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பலரிடம் இங்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒவ்வொரு சிக்னல்களிலும் பயந்து கொண்டே பயணிக்க வேண்டியதாயிற்று.

இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை, RTO ஆபிஸுக்கு அலையாமல், வீட்டில் இருந்தபடியே பழகுநர் – ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஆம், அது எப்படி என்றால், ஆன்லைன் மூலமாக அதனை நாம் பெற முடியும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம்.  ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது.

அத்துப்படி, ஒன்று LLR மற்றொன்று Driving Test ஆகும், முதலில் LLR பெற்று கொண்டால், பின்னர் 3 மாத கால அவகாசத்திற்கு பின், Driving Test முடிந்தவுடன் நமக்கு லைசன்ஸ் (ஓட்டுநர் உரிமம்) கிடைத்து விடும். ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுநர் உரிமம் பெறுவதுதான்.

பழகுநர் உரிமம் பெறுவதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://parivahan.gov.in/parivahan/ அல்லது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இணையதளமான https://tnsta.gov.in/tnsta/homepage என்கிற இணையதளத்தில் நாம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் :

  1. ரேஷன் கார்டு
  2. பாஸ்போர்ட்
  3. எல்ஐசி பாலிசி ரசீது
  4. வாக்காளர் அடையாள அட்டை
  5. மின்கட்டண ரசீது
  6. குடிநீர் கட்டண ரசீது
  7. சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று
  8. பள்ளிச் சான்று
  9. பிறப்பு சான்று
  10. பான் கார்டு

கட்டணம்

இருசக்கர வாகனம் அல்லது காருக்கு ஏதேனும் ஒன்றிக்கு ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பெற முடிவு:

  • மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவங்களைசரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் முன் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.
  • இந்த இணையதளங்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • பணம் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் லெனர் உரிமத் தேர்வுக்காக RTO-ஐப் பார்வையிட தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தேர்வில் தேர்ச்சி பெற்றால், RTO உடனடியாக பழகுநர் உரிமத்தை வழங்கும்.
  • நீங்கள் RTO தேர்வுக்குசெல்லும் போது, Payment Receipt, pre Filled application, Acknowledgement Receipt ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
  • உங்களுடைய Driving டெஸ்ட் முடிந்து 2 நாட்களில் உங்களுக்கான டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும்.
Published by
கெளதம்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

5 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

6 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

7 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

8 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

8 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

10 hours ago