6 வேரியன்ட்களில் களமிறங்கிய ‘மஹிந்திரா தார் ராக்ஸ்ஸின்’ சிறப்பம்சங்கள்!

Published by
அகில் R

சென்னை : இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 5 டோர்கள் கொண்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L என 6 வேரியன்ட்களில் ஆகஸ்ட்-15 அன்று இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு களமிறங்கி உள்ளது. இந்த ‘தார் ராக்ஸ்ஸின்’ தொடக்கநிலை வேரியன்ட்களின் விலைகள், தற்போது மற்ற வேரியன்ட்களின் விலைகள், சிறப்பம்சம், இதர விவரங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸ்டீரியர் அம்சம் :

இந்த மஹிந்திரா தார் ராக்சின் எக்ஸ்டீரியர் அம்சங்களை சொல்ல வேண்டும் என்றால் எக்ஸ்டென்டெட் வீல்பேஸ், ரியர் டோர் ஹேண்டல்ஸ், புதிய ஸ்லாட் கிரில் மற்றும் 360 டிகிரி கேமரா என எக்ஸ்ட்டிரியர் அம்சத்தில் பெரிதளவு குறை சொல்ல முடியாத வண்ணம் அமைந்துள்ளது.

இன்டீரியர் அம்சம் :

இந்த ‘மஹிந்திரா தார்’ உள்ளே நீங்கள் பலவிதமான அம்சங்களை பார்க்கலாம். அதில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட், ஃபுல் டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் செய்யப்பட்ட ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வென்ட்ஸ் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.

இன்ஜின் :

6 வேரியன்ட்களில் வெளியான இந்த தார் ராக்ஸில் வெளி தோற்றம் மற்றும் இன்டீரியர் அம்சம் ஒன்றாக இருந்தாலும் இன்ஜின் அமைப்புகள் 6 வேரியன்ட்களுக்கும் ப்ரத்யகமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

MX1 வேரியன்ட் :

இதில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. இந்த வேரியன்டில் 2 இன்ஜின்களுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியர் வீல் டிரைவ் வசதியை மட்டுமே இந்த அடிப்படை வேரியன்ட் கொண்டிருக்கிறது.

MX3 வேரியன்ட் :

இதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோடமேடிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

AX3L வேரியன்ட் :

இதில் டீசல் இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டீசல் இன்ஜினுடன் மேனுவலான கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

MX5  வேரியன்ட் : 

இந்த AX5 வேரியன்ட்டில் பெட்ரோல், டீசல் இன்ஜின் தேர்வுகள், ஆட்டோ மேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் மற்றும் 2WD, 4WD டிரைவ் தேர்வுகள் என அனைத்து விதமான காம்பினேஷன்களிலும் விற்பனையாகிறது.

AX5L வேரியன்ட் :

அதே நேரம், டீசல் இன்ஜினுடன் ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே இந்த AX5L வேரியன்ட்டில் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டு டிரைவ் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கிறது.

AX7L வேரியன்ட் :

டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.18.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், AX7L பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.19.99 லட்சம் விலையிலும், AX7L டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.20.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது.

எக்ஸ் ஷோரூம் விலை விவரங்கள் :

MX1 வேரியன்ட் :

  • பெட்ரோல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.12.99 லட்சம்
  • டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.13.99 லட்சம்

MX3 வேரியன்ட் :

  • பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.14.99 லட்சம்
  • டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.15.99 லட்சம்
  • டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.17.49 லட்சம்

MX5  வேரியன்ட் : 

  • MX5 பெட்ரோல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.16.49 லட்சம்
  • MX5 டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.16.99 லட்சம்
  • MX5 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.17.99 லட்சம்
  • MX5 டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.18.49 லட்சம்

AX3L வேரியன்ட் :

  • AX3L டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.16.99 லட்சம்

AX5L வேரியன்ட் :

  • AX5L டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.18.99 லட்சம்
  • AX5L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD ட்ரிம்மின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

AX7L வேரியன்ட் :

  • AX7L டீசல் மேனுவல் 2WD ட்ரிம்மானது ரூ.18.99 லட்சம்
  • AX7L பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.19.99 லட்சம்
  • AX7L டீசல் ஆட்டோமேட்டிக் 2WD ட்ரிம்மானது ரூ.20.49 லட்சம்

தார் ராக்ஸ் நிறங்கள்:

  • ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டெல்த் ப்ளாக், டீல் ஃபாரஸ்ட், பர்ன்ட் சியன்னா, நெபுலா ப்ளூ, டாங்கோ ரெட், மேட்டில்ஷிப் கிரே மற்றும் எவரெஸ்ட் வைட் ஆகும்.
  • மேலும், MX1 மற்றும் MX3 வேரியன்ட்கள், மொத்தம் 3 நிறங்களில் கிடைக்கிறது. ஸ்டெல்த் ப்ளாக், டாங்கோ ரெட் மற்றும் எவரெஸ்ட் வைட் ஆகும்.
  • இதில் குறிப்பிடாத மற்ற வேரியன்ட்கள் அனைத்தும் எல்லா நிறங்களிலும் கிடைக்கின்றன.
Published by
அகில் R

Recent Posts

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

1 hour ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

2 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

2 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

21 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

22 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

23 hours ago