என்னதான் மோட்டர் சைக்கிள் விற்பனையில் கொடிகட்டி பறந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தங்கியே உள்ளதால் தற்போது புதிய வகை ஸ்கூட்டர்களை களமிறக்க ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்தி உள்ளது. அதன் பெயர் டெஸ்டினி! இந்த புதிய வண்டி டெஸ்டினி எல் எக்ஸ், டெஸ்டினி வி எக்ஸ் என அறிமுகம் செய்யபட்டுள்ளது. டெல்லியில் அறிமுகம் செய்யபட்டுள்ள இதன் விலை 54,650/- (டெல்லியில்) என நிர்ணயிக்கபட்டுள்ளது. மற்ற இடங்களில் 57,000 என நிரணயம் செய்யபட்டுள்ளது.
இதன் மாடல் ஹீரோ டூயட்-ஐ ஞாபகபடுத்தும் வகையில் உள்ளது. இதில் எல் எக்ஸ் மாடலில் டிஸ்க் பிரேக், ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் (ஐ.பி.எஸ்.) சர்வீஸ் ரிமைண்டர், பாஸ்ஸ்விட், எக்ஸ்டர்னல் பெட்ரோல் ஃபில்லிங் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. வி.எக்ஸ். மாடலில் இன்னும் அதிகமாக பூட் லைட், மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, க்ரோம் கார்னிஷஸ் போன்ற தொழில் நுட்பம் உள்ளது.
இந்த மாடலில் கூல்டு எஞ்சின், 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆகியவை 8.7 பிச்பி திறனை அளிக்கிறது. ஹோண்டாவின் கிரேஸியா, சுசுகியின் ஆக்சஸ் 125 மற்றும் டி.வி.எஸ்.- என்டார்க் ஆகியவற்றுக்கு ஹீரோ டெஸ்டினி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…