125cc உடன் ஸ்கூட்டரை கம்பீரமாக களமிறக்கும் ஹீரோ! அதன் முக்கிய அம்சங்கள்!!!

Default Image

என்னதான் மோட்டர் சைக்கிள் விற்பனையில் கொடிகட்டி பறந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையில் பின்தங்கியே உள்ளதால் தற்போது புதிய வகை ஸ்கூட்டர்களை களமிறக்க ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்தி உள்ளது. அதன் பெயர் டெஸ்டினி! இந்த புதிய வண்டி டெஸ்டினி எல் எக்ஸ், டெஸ்டினி வி எக்ஸ் என அறிமுகம் செய்யபட்டுள்ளது. டெல்லியில் அறிமுகம் செய்யபட்டுள்ள இதன் விலை 54,650/- (டெல்லியில்) என நிர்ணயிக்கபட்டுள்ளது. மற்ற இடங்களில் 57,000 என நிரணயம் செய்யபட்டுள்ளது.
இதன் மாடல் ஹீரோ டூயட்-ஐ ஞாபகபடுத்தும் வகையில் உள்ளது. இதில் எல் எக்ஸ் மாடலில் டிஸ்க் பிரேக், ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் (ஐ.பி.எஸ்.) சர்வீஸ் ரிமைண்டர், பாஸ்ஸ்விட், எக்ஸ்டர்னல் பெட்ரோல் ஃபில்லிங்  போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. வி.எக்ஸ். மாடலில் இன்னும் அதிகமாக பூட் லைட், மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, க்ரோம் கார்னிஷஸ் போன்ற  தொழில் நுட்பம் உள்ளது.
இந்த மாடலில் கூல்டு எஞ்சின், 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆகியவை 8.7 பிச்பி திறனை அளிக்கிறது. ஹோண்டாவின் கிரேஸியா, சுசுகியின் ஆக்சஸ் 125 மற்றும் டி.வி.எஸ்.- என்டார்க் ஆகியவற்றுக்கு ஹீரோ டெஸ்டினி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்