மக்களுக்கு கார்களின் மீதுள்ள பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வெரு ஆண்டும் கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் கார்களை புதிய வடிவில் சந்தையில் இறக்குகின்றனர்.
குறைந்த விலை கார் முதல் அதிக விலை கார்கள் வரை சந்தையில் அந்தந்த பொருளாதார தரத்தில் உள்ள மக்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது
இவ்வறான கார் பிரியர்களுக்கவே பல நிறுவனங்கள் கார்களை வடிவமைத்து பல அம்சங்களுடனான கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கார்களில் உள்ள அம்சங்கள், வசதி, சொகுசு அதிகரிக்க அதிகாிக்க காரின் விலையும் அதிகரிக்கும்.
புகாட்டி நிறுவனத்தின் சிரோன் கார், இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிக்கிறது. 6700 ஆர்பிஎம் ல் 1500 பிஎச்பி பவர் கொண்ட இந்த கார் 42 நொடியில் 0 வில் இருந்து 400 கி.மீ. வேகத்திற்கு செல்லும் சக்தி வாயந்தது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 19 கோடி வரை மதிப்பிடப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த வாரம் இதன் அடுத்த வேரியன்டாக புகாட்சி ஸ்போர்ட் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மெக்லாரன் பி1எல்எம் கார் இந்த பட்டியலில் 6 வது இடத்தை பிடிக்கிறது. 3799 சிசி, 3.8 லிட்டர் இன்ஜின் உடன் வரும் இந்த கார் 1000 பிஎச்பி பவர் கொண்டது. இது 2.4 நொடிகளில் 0வில் இருந்து 100 கி.மீ., வேகத்திற்கு பிக்கப் செய்யக்கூடியது.
பினின்ஃபரினா பெராரி கார் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் பினின்ஃபரினா பெராரி பி4/5 ஆகிய கார்கள் இந்த நிறுவனம் பெராரியுடன் சேர்ந்து 6 கார்களை தயாரிக்க ஒப்பந்த மிட்டுள்ளது. இதில் தற்போது இந்த கார்கள் நம் பட்டியிலில் 5வது இடத்தை பிடிக்கிறது.
லேம்போகினி நிறுவனத்தின் லேம்பாகினி வேனினோ ரோடுஸ்டர் கார் 740 எச்.பி திறன் கொண்டது. இது 2.9 நொடிகளில் 0 வில் இருந்து 60 கி.மீ. வேகத்திற்கு பிக்கப் செய்யும்.
கொனிக்செக் சிசிஎக்ஸ்ஆர் டிரிவீட்டா, 1004 எச்பி திறன் கொண்ட இந்த காரின் உலகின் 3வது விலை உயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்த காரின் டிசைனும், வேகமும் தான் இதை வாங்குபவர்களை கவர்கிறது
மேபட்ச் எக்ஸிலரோ இது ஒரு சொகுசு வகை கார், இதை வாங்குபவர்கள் தங்களின் கவுரவமாகவே இதை கருதுகின்றனர். அதே நேரத்தில் இதன் வேகமும் அளப்பறியது. இது 4 நொடிகளில் 0 வில் இருந்து 100 கி.மீ., வேகத்தை பிக்கப் செய்யும்.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வாப் டெய்ல்ஸ் இந்த கார் தான் உலகில் அதிக விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்தாண்டு அறிமுகமான இந்த கார் 6.75 லிட்டர் வி12 ரக இன்ஜினுடன் வருகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…