விலை உயர்ந்த கார்களின் பட்டியல் இதோ…!!

Default Image

 

மக்களுக்கு கார்களின் மீதுள்ள பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வெரு ஆண்டும் கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் கார்களை புதிய வடிவில் சந்தையில் இறக்குகின்றனர்.

குறைந்த விலை கார் முதல் அதிக விலை கார்கள் வரை சந்தையில் அந்தந்த பொருளாதார தரத்தில் உள்ள மக்கள் மத்தியில் கார் வாங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது

இவ்வறான கார் பிரியர்களுக்கவே பல நிறுவனங்கள் கார்களை வடிவமைத்து பல அம்சங்களுடனான கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கார்களில் உள்ள அம்சங்கள், வசதி, சொகுசு அதிகரிக்க அதிகாிக்க காரின் விலையும் அதிகரிக்கும்.

புகாட்டி நிறுவனத்தின் சிரோன் கார், இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிக்கிறது. 6700 ஆர்பிஎம் ல் 1500 பிஎச்பி பவர் கொண்ட இந்த கார் 42 நொடியில் 0 வில் இருந்து 400 கி.மீ. வேகத்திற்கு செல்லும் சக்தி வாயந்தது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 19 கோடி வரை மதிப்பிடப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த வாரம் இதன் அடுத்த வேரியன்டாக புகாட்சி ஸ்போர்ட் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மெக்லாரன் பி1எல்எம் கார் இந்த பட்டியலில் 6 வது இடத்தை பிடிக்கிறது. 3799 சிசி, 3.8 லிட்டர் இன்ஜின் உடன் வரும் இந்த கார் 1000 பிஎச்பி பவர் கொண்டது. இது 2.4 நொடிகளில் 0வில் இருந்து 100 கி.மீ., வேகத்திற்கு பிக்கப் செய்யக்கூடியது.

பினின்ஃபரினா பெராரி கார் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் பினின்ஃபரினா பெராரி பி4/5 ஆகிய கார்கள் இந்த நிறுவனம் பெராரியுடன் சேர்ந்து 6 கார்களை தயாரிக்க ஒப்பந்த மிட்டுள்ளது. இதில் தற்போது இந்த கார்கள் நம் பட்டியிலில் 5வது இடத்தை பிடிக்கிறது.

லேம்போகினி நிறுவனத்தின் லேம்பாகினி வேனினோ ரோடுஸ்டர் கார் 740 எச்.பி திறன் கொண்டது. இது 2.9 நொடிகளில் 0 வில் இருந்து 60 கி.மீ. வேகத்திற்கு பிக்கப் செய்யும்.

கொனிக்செக் சிசிஎக்ஸ்ஆர் டிரிவீட்டா, 1004 எச்பி திறன் கொண்ட இந்த காரின் உலகின் 3வது விலை உயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்த காரின் டிசைனும், வேகமும் தான் இதை வாங்குபவர்களை கவர்கிறது

மேபட்ச் எக்ஸிலரோ இது ஒரு சொகுசு வகை கார், இதை வாங்குபவர்கள் தங்களின் கவுரவமாகவே இதை கருதுகின்றனர். அதே நேரத்தில் இதன் வேகமும் அளப்பறியது. இது 4 நொடிகளில் 0 வில் இருந்து 100 கி.மீ., வேகத்தை பிக்கப் செய்யும்.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வாப் டெய்ல்ஸ்   இந்த கார் தான் உலகில் அதிக விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்தாண்டு அறிமுகமான இந்த கார் 6.75 லிட்டர் வி12 ரக இன்ஜினுடன் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்