பைக்கை பராமரிக்க 10 டிப்ஸ் .. இதோ..!

நாம் அன்றாடம்  உபயோகப்படுத்துவதில் நமது பைக்கும் ஒன்றாகும். அந்த இரு சக்கர வாகனத்தை நாம் மாதம் ஒரு முறையாவது பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காமல் விட்டால் நமது இரு சக்கர வாகனம் பழுதாகி விடும். அதனால், நமது பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஒரு 10 டிப்சை பற்றி பாப்போம்.

1) என்ஜின் ஆயில் :

நமது பைக் இயங்குவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்றாக இருப்பது பைக்கின் இன்ஜின் தான். அந்த என்ஜினை சரியாக பரிமாறிக்க வேண்டும். 1000 கி.மீ வண்டியை ஓட்டினால் என்ஜினில் உள்ள ஆயிலை நாம் மாற்ற வேண்டும். அப்படி செய்யா விட்டால் என்ஜினே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். அது நமக்கு அதிக செலவை வைத்து விடும்.

2) பிரேக்குகள் :

பிரேக்கு நம் வாகனத்திற்கு மிக முக்கியமான தேவையாகும். பயணத்தின் போது வேகத்தை குறைக்கவும், வேகத்தை கட்டு படுத்தவும், வாகனத்தை சரியாக நிறுத்தவும் இந்த பிரேக்குகள் தேவைப்படுகிறது. முன் பிரேக்கு, பின் பிரேக்கு என இரண்டு பிரேக்குகளையும் நம் எங்கு செல்ல புறப்பட்டாலும் சரி பார்த்து விட்டே செல்ல வேண்டும். பிரேக்குகள் நம் உயிர் காக்கும் அதனால் அதை சரியாக பராமரிக்க வேண்டும்.

3) டயர் :

நமது வாகனம் நகர்வதற்கு டயர்கள் மிக முக்கிய தேவை. அவை நகர்வதற்கு காற்று தேவை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு டயர்களிலும் காற்றை சரி பார்க்க வேண்டும். இதனால் டயர்களின் ஆயுட்காலம் நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதில் ஏதாவது பழுது இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்.

ஜனவரியில் 15% அதிகரித்த வாகன சில்லறை விற்பனை..!

4) ஏர் ஃபில்டர் :

நமது வாகனம் மிக தூரம் பயணிக்கிறது என்றால் பைக்கின் உட்ப்புறத்தில் மாசு ஏற்பட்டிருக்கும். காற்று வழியாக ஏற்பட கூடிய மாசுகளை ஃபில்டர் செய்து வைப்பதுதான்  ஏர் ஃபில்டர் வேலை, அதையும் நாம் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

5) கிளட்ச் :

கியர் உள்ள இரு சக்கர வாகனத்தில் இந்த கிளட்ச் என்பது காணப்படும். இதன் பயன் மிகவும் சிறியது ஆனால் அதை நாம் சரியாக செய்தால் நீண்ட காலம் நமது பைக் நன்றாக  இருக்கும்.  இந்த கிளட்ச்சானது நாம் வாகனம் ஓட்டும் போது கியரை மாற்றுவதற்கு உபயோகப்படுகிறது. நாம் கியர் போடும் பொழுது கிளட்சை பிடித்து தான் கியர் இட வேண்டும் இது வண்டியின் கியர் பாக்ஸிற்கு மிகவும் நல்லதாகவும். நாம் கிளட்சை சரி பார்க்க வில்லை என்றால் அது நமது கியர் பாக்ஸிற்கு சேதம் விளைவிக்கும் வண்ணம் அமைந்து விடும்.

6) பேட்டரி :

இரு சக்கர வாகனத்திற்கு முக்கியமான ஒன்றாகும். வண்டியின் லைட், ஹார்ன் போன்றவற்றிக்கு உயிர்கொடுக்கும் பொருளே பேட்டரி ஆகும். அந்த பேட்டரியை நாம் சரியாக பராமரித்து வர வேண்டும். வாகனத்தில் லைட், ஹார்ன் இயங்காமல் இருந்தால் அது நமக்கு விபரீதத்தை விளைவிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அதை சரியாக சார்ஜ் செய்து உபயோக படுத்த வேண்டும்.

7) சர்வீஸ் சென்டர் :

இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நம் எல்லாருக்கும் பைக்கில் ஏற்பட கூடிய சிறிய சிறிய பழுதுகளை நாமே சரி செய்யும் பழக்கம் இருந்துருக்கும். அது நல்லதாக இருந்தாலும். நாமே நமது பைக்கை சர்வீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட கூடாது. வண்டியின் சர்வீஸ் அட்டையை சரியாக பயன்படுத்தி முறையாக இருக்க கூடிய சர்வீஸ் சென்டரில் நமது வண்டியை சரி பார்க்க வேண்டும்.

8) செயின் :

வண்டியின் முக்கியமான ஒன்றான வண்டியின் செயின் உள்ளது. அதை நாம் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். செயினில் படிந்திருக்க கூடிய தூசுகளை மென்மையான துணிகளால் துடைக்க வேண்டும். உப்பு தண்ணீர் உபயோக படுத்தாமல் இருந்தால் அது மிகவும் நல்லது. துடைத்த பிறகு அதில் எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.

9) வாகன ஓட்டிகள் :

வாகனத்தை என்னதான் பராமரித்தலும் அதை ஓட்டும் பொழுது மிகவும் கவனமாகவும், குறிப்பிட்ட வேகத்திலும் தான் ஓட்ட வேண்டும். வேகமாய் ஓட்டுவதால் வண்டியில் பிரச்சனைகள் வர கூடும் மேலும் ஓட்டும் பொழுது கவனம் சிதறினால் அது நமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். அதனால் ஒரு பொறுப்புடன் வாகன ஓட்டிகள்  வண்டியை இயக்க வேண்டும்.

10) தின சுத்தம் :

நம் வண்டியை நாம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். நாம் வேலைகளுக்கு சென்றாலும், அன்று விடுமுறையாக இருந்தாலும் வண்டியை நாம் தினமும் மென்மையான துணிகளால்  மேல்புறமாக துடைக்க வேண்டும். இப்படி செய்வதனால் வண்டிக்கு ஏற்பட கூடிய சிறிய சிறிய பழுதுகளும் உடனடியாக நமது கண்ணில் தென்பட்டு விடும். மேலும், தினதோறும் துடைப்பதால் நமக்கும் ஒரு வித திருப்தியும் ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்