விபத்துக்களை தடுக்கும் ‘HD லைட்டிங்’ டெக்னாலஜி… ஹூண்டாய் நிறுவனத்தின் ‘பளீச் பளீச்’ வசதி.!!
ஹூண்டாய் நிறுவனம் இரவு நேர விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது என்று கூறலாம். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் வெளியே செல்வதால் வாகனத்தின் முன்விளக்குகள் அதாவது ஹெட் லைட் போட்டு கொண்டே சென்றாலும் எதிர்பாராத விதத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்த நிலையில் விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கும் வகையில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், தங்காள் தயாரிக்கும் காரில் உள்ள ஹெட் லைட்டில் அதிரடியான ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எச்டி லைட்டிங் (HD Lighting)
ஹூண்டாய் நிறுவனம் ‘எச்டி லைட்டிங்’ (HD Lighting) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது இரவு நேரங்களில் சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாலையில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா..? அல்லது யாராவது நடந்து செல்கிறார்களா..? என்ற தகவலை உடனடியக அந்தநேரத்திலே ஓட்டுனருக்கு தெரிவிக்கிறது.
அது மட்டுமின்றி, செல்லும் பகுதியில் கட்டட பணிகள் ஏதேனும் நடந்து வருகிறது என்றால், அப்பபகுதியில் செல்லவேண்டாம் என்ற குறீயிடை இது தெளிவாக காட்டுகிறது. அதே போல சாலையில் சென்றுகொண்டிற்கும் போது அதில் நாம் வலதுபுறம் திரும்புகிறோம் , அல்லது இடது புறம் திரும்புகிறோம் என்றால் சாலையில் இருக்கும் அதற்கான குறியிடுகளை அழகாக காமிக்கிறது. ஹூண்டாய்வின் எச்டி லைட்டிங்கின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இது கேமரா சென்சார், ஜிபிஎஸ், மற்றும் வழிகாட்டி மூலம் வழங்கப்படும் தகவல்களை காட்டுகிறது.
இந்த தகவல்கள் ஆனது காருக்குள் இருக்கும் கணினி வழியாக ஓட்டுனருக்கு காட்டி பாதுகாப்பாக ஓட்டவும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு வாகனம் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தை நெருங்கும்போது இந்த அமைப்பானது 15 மீட்டருக்கு முன்னதாகவே “கட்டமைப்பின் கீழ்” என்ற குறியிட்டை காட்டுகிறது.
மேலும் அதைப்போலவே, செல்லும் வழியில் வேகத்தடை இருந்தால் ஓட்டுனருக்கு முன்கூட்டியே காமிக்கிறது. இத்தொழில்நுட்பம், பார்வைத்திறனை அதிகரிக்கவும், இரவில் விபத்துகளைத் தடுக்கவும் பெருமளவில் உதவுகிறது. எனவே, இந்த HD லைட்டிங் தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து விபத்துக்களைக் குறையவாய்ப்புள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
எச்டி லைட்டிங்கின் வடிவமைப்பு
HD லைட்டிங் சிஸ்டம் 0.04 மிமீ அகலம் கொண்ட சுமார் 25,000 மைக்ரோ எல்இடிகளைக் கொண்டுள்ளது. இது மனித முடியை விட மெல்லியதாக இருக்கும். இது தற்போது பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் எல்இடி ஹெட்லேம்ப்களில் (80-120 எல்இடிகள்) நிறுவப்பட்ட எல்இடிகளை விட 250 மடங்கு அதிகம். இது அதிக எண்ணிக்கையிலான எல்.ஈ.டிகளைக் கொண்டிருப்பதால், இதன் மூலம் அதிகளவு ஒளிதிறனானது வெளிப்படுகிறது.
Our next-generation headlamps illuminate and recreate roads to provide a safer, brighter future.
Read more here: https://t.co/ou6OOL5sOt#HDLightingSystem #FutureMobility #TheOneforAllMobility #MOBIS #HyundaiMOBIS pic.twitter.com/qGIKFhyG4E
— Hyundai Mobis Global (@global_mobis) May 26, 2023