ஆட்டோமொபைல்

அதிகரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோகம்…”iQube” விலையை உயர்த்திய டிவிஎஸ்.!!

Published by
பால முருகன்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் அதன் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயரும் என அறிவித்துள்ளது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் பைக் (TVS iQube)

TVS iQube [Image source : FimeImage]

இப்போது இருக்கும் காலகட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றத்தை கண்டு வருகிறது. எனவே, மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும், குறிப்பாக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பலரும் வாங்கி உள்ளார்கள்.

விலை அதிகரிக்கும்..? 

இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.87,691 – ரூ.1.2 லட்சம் வரை விற்கப்படுகிறது.  எனவே மக்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  அது என்னவென்றால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் அதன் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. FAME II திட்டத்தின் கீழ் EV உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விகிதத்தை மையம் குறைத்ததால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

TVSiQube [Image source : FimeImage]

ஜூன் 1 முதல் மின்சார இரு சக்கர வாகனத்தின் விலையில் 15% மட்டுமே மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 40% கட்டணம் இருந்தது. FAME II திருத்தத்திற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் TVS iQube இன் விலை  17,000 முதல் 22,000 வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

TVS iQube [Image source : FimeImage]

மேலும், மே 20 வரையில் புக் செய்த அனைவருக்கும் loyalty benefit programme கீழ் பழைய விலையின் படியே வாகனங்களை டெலிவரி செய்ய உள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதி முதல் வாகனத்தை முன்பதிவு செய்வதில் FAME II திருத்தத்தின் கீழ் அறிவிக்கப்படும் விலையில்  ஸ்கூட்டர்களை வாங்கி கொள்ளலாம் என டிவிஎஸ் சிஇஒ கே.என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் எலக்ட்ரிக் பைக் (TVS iQube) சிறப்பம்சம் 

  • இந்த எலக்ட்ரிக் பைக் 52 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
  • இந்த எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்.
  • இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 78 கீ.மீ வேகம் வரை செல்லலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

15 minutes ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

18 minutes ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

2 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

2 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

4 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

4 hours ago