அதிகரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோகம்…”iQube” விலையை உயர்த்திய டிவிஎஸ்.!!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் அதன் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயரும் என அறிவித்துள்ளது.
டிவிஎஸ் எலக்ட்ரிக் பைக் (TVS iQube)
இப்போது இருக்கும் காலகட்டத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றத்தை கண்டு வருகிறது. எனவே, மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும், குறிப்பாக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்த iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பலரும் வாங்கி உள்ளார்கள்.
விலை அதிகரிக்கும்..?
இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.87,691 – ரூ.1.2 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே மக்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் அதன் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. FAME II திட்டத்தின் கீழ் EV உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விகிதத்தை மையம் குறைத்ததால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஜூன் 1 முதல் மின்சார இரு சக்கர வாகனத்தின் விலையில் 15% மட்டுமே மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 40% கட்டணம் இருந்தது. FAME II திருத்தத்திற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் TVS iQube இன் விலை 17,000 முதல் 22,000 வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
மேலும், மே 20 வரையில் புக் செய்த அனைவருக்கும் loyalty benefit programme கீழ் பழைய விலையின் படியே வாகனங்களை டெலிவரி செய்ய உள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதி முதல் வாகனத்தை முன்பதிவு செய்வதில் FAME II திருத்தத்தின் கீழ் அறிவிக்கப்படும் விலையில் ஸ்கூட்டர்களை வாங்கி கொள்ளலாம் என டிவிஎஸ் சிஇஒ கே.என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிவிஎஸ் எலக்ட்ரிக் பைக் (TVS iQube) சிறப்பம்சம்
- இந்த எலக்ட்ரிக் பைக் 52 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
- இந்த எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்.
- இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகபட்சமாக 78 கீ.மீ வேகம் வரை செல்லலாம்.
.@TVSMotorCompany has increased the price of its iQube electric scooter in response to the drop in Fame II subsidy by the government. Following FAME II revision from June 1, 2023, the price of the TVS iQube will increase in between Rs. 17,000 and Rs. 22,000, depending on the… pic.twitter.com/4rDB20q6By
— 91Wheels.com (@91wheels) June 2, 2023