எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் முன்னணியில் இருக்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (ஜிஇஎம்பிஎல்)-க்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், அண்மையில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டரான ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்கூட்டர் இப்போது இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் எவரேனும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், தாமதப்படுத்தாமல் இப்பொழுதே வாங்குங்கள். ஏனெனில், அதன் விலையில் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிளிப்கார்ட்டில் ஆம்பியர் பிரைமஸ் ஸ்கூட்டர் மீது 16% தள்ளுபடி உள்ளது. சாதாரண நாட்களில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.46 லட்சம் ஆகும். ஆனால், இப்போது 16% தள்ளுபடியில் ரூ.23,455 குறைக்கப்பட்டு, ரூ.1,22,900 லட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளது.
இதற்கு இன்னும் சில சலுகைகளும் உள்ளன. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்படும். பிளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கார்டில் 5% கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு இஎம்ஐ வசதியும் உள்ளது. அதன்படி, மாதம் ரூ.4,321 என்பதில் இருந்து இஎம்ஐ தொடங்குகிறது.
இதில் டியூப்லெஸ் டயர் உடன் கூடிய அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் ரியர் சஸ்பென்ஷன், ட்ரம் பிரேக் அமைப்பு உள்ளது. புதிய ஆம்பியர் ப்ரைமஸ் இ-ஸ்கூட்டர் மிட்-மவுண்டட் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதை செயல்படுத்த 3 கிலோ வாட் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி உள்ளது.
இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். ப்ரைமஸ் ஸ்கூட்டர் 4.2 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதோடு மணிக்கு 77 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் பவர், சிட்டி, ஈகோ, மற்றும் ரிவர்ஸ் என நான்கு மோட்கள் உள்ளன.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…