இந்திய கார் சந்தையின் வளர்ச்சியை கண்டு கடையை போட்ட இத்தாலி …!!! இனி ஃபெராரி ரக கார்கள் இந்தியாவிலும் விற்பனைக்கு…!!!!
உலக புகழ்பெற்ற ஃபெராரி வகை சேர்ந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் தற்போது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஃபெராரி நிறுவனம் சொகுசு கார்கள் மற்றும் பந்தய கார்கள் தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது இந்தியாவின் சொகுசு கார் சந்தையின் விற்பனை வளர்ச்சியை கண்டு வியந்த ஃபெராரி, தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கார் இறக்குமதியில் சிறந்து விளங்கும் ஷ்ரேயான்ஸ் நிறுவனத்தை அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக ஃபெராரி நிறுவனம் நியமித்துள்ளது.தலைநகர் டில்லியில் முதல் கார் ஷோரூமை விரைவில் திறக்கவுள்ள ஃபெராரி,
இந்த ஆண்டு மத்தியில் மும்பையில் இரண்டாவது ஷோரூமையும் திறக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த ஃபெராரி கலிஃபோர்னியா,458 இட்டாலியா, 599 ஜிடிபி ஃபியரானோ மற்றும் FF உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபெராரி திட்டமிட்டுள்ளது.
மேலும், விற்பனையை அதிகரிக்கவும், ஃபெராரியின் சேவை அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் இந்தியா முழுவதும் டீலர்களை நியமிக்கும் எண்ணத்திலும் ஃபெராரிக்கு உள்ளது.இந்த பிரபலமான பெராரி காரின் விலை ரூ.2.2கோடி முதல் கிடைக்கும் என்று ஷ்ரேயான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தகவல் இந்தியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
DINASUVADU.