நோ பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்ததால், 3 கோடிரூபாய் மதிப்ப்புமிக்க காரை நொறுக்கிய போலீசார்
கார் வைத்திருப்பவர்கள் அதனை சிலர் தன் கண் போல பார்த்து கொள்கின்றனர். அப்படி இருக்கையில் ஒருவர் தனது காரை ஓர் இடத்தில் பார்க் செய்திவிட்டு திரும்பி வந்து பார்கையில் கார் அப்பளமாக நொறுங்கியது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் உயர் ரக பெராரி ரக கார் என தெரிந்ததும் பல கார் பிரியர்களின் நெஞ்சமும் நொறுங்கியது.
யு.கேவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் ஆஜராக சென்றிருந்தார். அப்போது தனது ஃபெராரி காரை நோ பார்கிங் ஏரியாவில் பார்க் செய்து சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்க்கும் போது காரை காணவில்லை. கார் குறித்து ஷாகித் கான் விசாரித்த போது, போலீசார் காரை எடுத்து சென்றது. அந்த கார் முற்றிலுமாக உடைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் முறையாக காப்பீடு செய்யப்படவில்லை என காரணம் கூறப்பட்டது.
அது குறித்து கார் ஓனரிடம் விசாரிக்கையில் எனது கார் காப்பீடு செய்யபட்டிருந்தது எனவும், எனது சட்ட ஆலோசனை கேட்காமலே போலீசார் காரை பறிமுதல் செய்ததாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.