6 நிமிடத்தில் அதிவேக சார்ஜிங்..! வெளியானது புதிய நியோபோல்ட் ‘கான்செப்ட் இவி’ ஸ்போர்ட்ஸ் கார்..!

NyoboltConceptEV

நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம், 6 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் கான்செப்ட் EV ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில், அதிவேக-சார்ஜிங் பேட்டரிகளை தயாரிக்கும் நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம் ஒரு புதிய கான்செப்ட் இவி (Concept-EV) ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது.

Nyobolt
Nyobolt [Image Source : Twitter/@Ris_Motors]

இந்த காரை புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜூலியன் தாம்சன் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், தற்போதைய மின்சார வாகனங்களை விட மிக விரைவாக சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் ஆக 6 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Nyobolt
Nyobolt [Image Source : Twitter/@Ris_Motors]

மேலும் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 1,600 மைல் வேகத்தில் சார்ஜ் செய்வதற்கு சமமாகும். இந்த நியோபோல்ட் கான்செப்ட் இவி கார் ஆனது மற்ற கார்களை விட எடை குறைவாக இருக்கும். ஏனென்றால், இதில் சிறிய மற்றும் இலகுவான புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை நியோபோல்ட் பயன்படுத்தியுள்ளது.

Nyobolt
Nyobolt [Image Source : Twitter/@Ris_Motors]

இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 35kWh திறன் கொண்டுள்ளது. நியோபோல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் சிவரெட்டி கூறுகையில், முன்னெல்லாம் சிறிய பேட்டரிகளால் வாகனத்தை இலையாக முடியாது என்றும் விலையுயர்ந்த மற்றும் பெரிய பேட்டரிகள் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

Nyobolt
Nyobolt [Image Source : Twitter/@Ris_Motors]

எங்களின் தனித்துவமான தொழில்நுட்பத்தின் மூலம் ஆறு நிமிட சார்ஜ் காரை உருவாக்கியுள்ளோம். மேலும், அதிக ஆற்றல் மற்றும் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சிறிய பேட்டரிகளையும் உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த நியோபோல்ட் கான்செப்ட் இவி ஸ்போர்ட்ஸ் கார் மூலம் நேரம் என்பது அதிக அளவில் மிச்சமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்