இந்தியாவின் எதிர்காலம் மின்சார வாகனங்கள் தான்.! அடித்து கூறும் BMW மூத்த தலைவர்.!

BMW Electric Car

எலக்ட்ரிக் வாகனங்கள் : இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து வருகிறது.

தற்போது கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நமது சாலைகளில் பயன்பாட்டில் வந்துள்ளன. அதே போல, மூன்று சக்கர, நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களும் பயன்பாட்டில் ஓரளவு தென்படுகின்றன.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜீன்-பிலிப் பாரைன் நேற்று (வியாழன்) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், BMW குழுமம் மின்மயமாக்கலுக்கான மாற்றத்தை நோக்கிய ஆட்டோமொபைல் சந்தை பயணத்தில் ஒரு படியாக இருக்கும் என்று கருதுகிறது. PHEV (Plug-in hybrid electric vehicles) ரக எலக்ட்ரிக் வாகனங்கள் பயனர்கள் நீண்ட தூரம் பயணிக்க எதுவாக பொதுவான கலப்பின மின்சார வாகனத்தை (HEV) விட பெரிய பேட்டரிகளை கொண்டுள்ளது.    இந்த ரக வாகனங்கள் மூலம் சில சந்தர்ப்பங்களில் எலக்ட்ரிக் ரகத்தில் இருந்து மற்று எரிசக்திகளையும் பயன்படுத்தலாம். பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் முன்மொழிகிறோம்.

அதே நேரத்தில், நான் இந்தியாவுக்காக பேசினால், BEVகளுக்கு (எலக்ட்ரிக் வாகனம்)  மாறுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவேன். அது தான் இந்திய மோட்டார் வாகன சந்தையின் எதிர்காலமாக இருக்கலாம் எனவும் ஜீன்-பிலிப் பாரைன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத்திற்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுவதை குறிப்பிட்டு, ” ஒரு நாட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு சலுகை அளிக்கப்பட்டால், வாகன உற்பத்தியாளர்கள் அந்த ஒரு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினால், அந்த துறையில் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜீன்-பிலிப் பாரைன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தற்போது, ​​இந்தியாவில் பேட்டரி மின்சார வாகனங்களுக்கு 5% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது. அதுவே எரிபொருள் நிரப்பும் ICE வாகனங்களுக்கு, வரி விகிதம் சிறிய வாகனங்களுக்கு 28% ஆகவும் , மற்றும் பெரிய வாகனங்களுக்கு 45% ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்