சமீப காலமாக இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, பல்வேறு அம்சங்களை கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் வருகை சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், அதிக விலை என்பதால் எளிதாக எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடியவில்லை. இருந்தாலும், அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், விரும்புபவர்களின் சதவீதமும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில், பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது .
அதில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க 58% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், 80% க்கும் அதிகமான மக்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. பெரும்பாலானோர் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வகை கார்களையே அதிகம் விரும்புவதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
அதாவது, சார்ஜ் ஏறுவதற்கு அதிகம் நேரமாகுதல், பேட்டரியின் பாதுகாப்பு, குறைவான சார்ஜிங் நிலையங்கள் என பல்வேறு சவால்கள் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், ரூ.10 லட்சத்திற்கும் கீழ் உள்ள பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முறையே 23% மற்றும் 22% வாடிக்கையாளர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபோன்று, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள பெட்ரோல், டீசல் கார்களை வாங்க 59 சதவிகித மக்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் செலவு குறைவு உள்ளிட்டவையே எலெக்ட்ரிக் கார்கள் மீதான மவுசு இந்தியர்கள் மத்தியில் எகிறியுள்ளது என்றே கூறலாம்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…