இந்தியர்களிடம் எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறும் மவுசு! ஏன் தெரியுமா?

Electric Cars

சமீப காலமாக இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, பல்வேறு அம்சங்களை கொண்ட எலெக்ட்ரிக் கார்களின் வருகை சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக இந்திய சந்தையில் எலெக்ட்ரி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Read More – விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்!

ஆனால், அதிக விலை என்பதால் எளிதாக எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடியவில்லை. இருந்தாலும், அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், விரும்புபவர்களின் சதவீதமும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில், பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது .

Read More – புதிய கார் வாங்க போறிங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்காக இதோ!

அதில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க 58% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், 80% க்கும் அதிகமான மக்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. பெரும்பாலானோர் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வகை கார்களையே அதிகம் விரும்புவதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

அதாவது, சார்ஜ் ஏறுவதற்கு அதிகம் நேரமாகுதல், பேட்டரியின் பாதுகாப்பு, குறைவான சார்ஜிங் நிலையங்கள் என பல்வேறு சவால்கள் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More – இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்!

அதேபோல், ரூ.10 லட்சத்திற்கும் கீழ் உள்ள பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முறையே 23% மற்றும் 22% வாடிக்கையாளர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுபோன்று, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலையுள்ள பெட்ரோல், டீசல் கார்களை வாங்க 59 சதவிகித மக்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எனவே,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் செலவு குறைவு உள்ளிட்டவையே எலெக்ட்ரிக் கார்கள் மீதான மவுசு இந்தியர்கள் மத்தியில் எகிறியுள்ளது என்றே கூறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்