இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள்?ஆல்ஸ்டாம் திட்டம் ….
ஆல்ஸ்டாம் நிறுவனத் தலைவர் ஹென்றி பப்பார்ட் லாபார்ஜ் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எஞ்சின்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் பீகார் மாநிலம் மாதேபுராவில் இந்திய ரயில்வேயுடன் இணைந்து மின்சார ரயில் எஞ்சின்களைத் தயாரித்து வருகிறது.
அவர் இந்தியாவில் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஒரு நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எஞ்சினையும் தயாரிக்கத் தனது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.