ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் , பல்வேறு நாடுகளுக்கு பைக் ரைட் போக விருப்பமுள்ளவர்களை அழைத்துள்ளது. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹார்லி டேவிட்சன், இன்டன்ஷிப் எனப்படும் பணி அனுபவ பயிற்சி பெற வருபவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாய்பை வழங்கியுள்ளது.
ஹார்லே டேவிட்சன் பைக்கில் பல்வேறு நாடுகளில் பயணித்து அதன்மூலம் கிடைத்த அனுபவங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட வேண்டும். தங்கள் நிறுவனத்தை மேலும் விளம்பரப்படுத்த புதுமுயற்சியில் இறங்கியுள்ள ஹார்லி டேவிட்சன், இன்டன்ஷிப் வருபவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது