காரில் ஓவர்லோடு ஏற்றுபவரா நீங்கள்..? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ..?

Default Image

 

சிலர் கார்களில் ஓவர்லோடுகளை ஏற்றி வருகின்றனர். கார்களில் மட்டுமில்லாமல் லாரி, லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ என எல்லா வாகனங்களிலும் இந்த கூத்து நடந்து தான் வருகிறது. லாரியை விட இரண்டு மடங்கு வைக்கோல் வைக்கப்பட்டுள்ள அகலம் அதிகமாக இருக்கும் இந்த லாரி ஒரு ரோட்டில் போனால் எதிரில் வருபவர்களும், இவர்களுக்கு பின்னால் வருபவர்களும் இவர்களை தாண்டி செல்வது கடினம் தான். இவ்வாறாக ஓவர் லோடு ஏற்றுவது சட்டப்படி தவறு தான்.

உங்கள் கார் அதிக சிசி, அதிக பவர்/டார்க் திறன் கொண்டது என எண்ணி அதில் அதிக பாாரத்தை ஏற்றாதீர்கள். நீங்கள் பெரிய கார் வைத்திருந்தாலும் சாரி சாதாரண ஆட்டோ வைத்திருந்தாலும் சரி அதற்கான அளவை தாண்டி பொருள் ஏற்றும் போது எந்த வாகனமும் அதை தாங்காது.

இதனால் நீங்கள் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிரேஷன் கொடுக்க வேண்டியது வரும். இதனால் அதிக பெட்ரோல் செலவாவதோடு இன்ஜினின் வாழ்நாளும் குறையும். அதே நேரத்தில் நீங்கள் பிரேக் பிடிக்கும் போதும் அதிக அழுத்தம் தேவைப்படும் இதனால் பிரேகிலும் கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் பிரேக் பெயிலியர் ஆக கூட வாய்ப்புள்ளது.

உங்கள் காரின் சஸ்பென்சன் என்பது உங்கள் காரில் ஏற்றுவதற்கான அதிக பட்ச எடையை கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும் அப்படி இருக்கையில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றினால் சஸ்பென்சன் சரியாக வேலை செய்யாமல்போகும்.

காரில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றும் போது அதன் சமநிலையாக இருக்கும் என்பதை நீங்கள் கூற முடியாது. ஒருபுறம் எடை அதிகமாக இருந்து மறுபுறம் குறைவாகஇருந்தால் எடை அதிகமாக இருக்கும் பகுதியில் டயர் ஒரு பக்கமாக அழுத்தம் பெரும் இதனால் டயரின் ஒரு பகுதி மற்றமு் அதிக தேய்மானத்திற்குள்ளாகும்.

காரை திருப்புகையில் ஒரு பக்கமாக கார் இழுக்கும். இதனால் விபத்து கூட ஏற்படலாம். பராமரிப்பு செலவு அதிகரிக்கும் உங்கள் காரில் உள்ள அனைத்து பாகங்களும் காரில் ஏற்றக்கூடிய அதிகபட்ச எடையை கணக்கில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும்.

இன்சூரன்ஸ் கிடைக்காது ஒருவேலை நீங்கள் காரில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் போது கார் விபத்தில் சிக்கினால் நீங்கள் காருக்காக இன்சூரன்ஸ் செய்திருந்தாலும். இந்நிறுவனம் காரில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றியதை கூறி உங்களுக்கான இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுக்கும். இதனால் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு நீங்கள் காரில் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட அளவுடைய பாரத்தை மட்டுமே ஏற்றி பயணம் செய்ய வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்