கடந்த மூன்று வருடத்தில் விற்பனையில் சாதனை படைத்த டியோ ஸ்கூட்டர் !

Published by
murugan

ஹோண்டா இந்தியா டியோ ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை செய்து உள்ளது. 2002-ம் ஆண்டு டியோ ஸ்கூட்டர் அறிமுகமானது . மேலும் ஹோண்டா  நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் சிறந்த இரு சக்கர வாகனமாக உள்ள  நிலையில் டியோ ஸ்கூட்டர் விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளது .

டியோ ஸ்கூட்டர்  விற்பனை எண்ணிக்கையில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 15 லட்சத்தை எட்டியுள்ளது.

டியோ ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்:

டியோ ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 109.2cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. மேலும் அதிகபட்சமாக 8 bhp திறன் , 8.9 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும் எல்இடி ஹைட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. டியோ ஸ்கூட்டர் ஒன்பது விதமான நிறங்களை  பெற்றுள்ளது.

கடந்த 2002-ஆண்டு அறிமுகமான டியோ ஸ்கூட்டர் 14 வருடங்களில் வெறும் 15 லட்சம் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை ஆகியது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 15 லட்சம் ஸ்கூட்டர் விற்பனை ஆகியுள்ளது.

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ஸ்கூட்டரில் இதும் ஒன்றாகும்.மேலும் இந்தியா உட்பட ஏற்றுமதி சந்தையில் 44 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது . டியோ  ஸ்கூட்டர்  கொலம்பியா, நேபால், மெக்சிக்கோ, இலங்கை ஆகிய நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

 

Published by
murugan

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

2 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

2 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

4 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

5 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

5 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

6 hours ago